உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

71

அற்றே லஃதாக நச்சினார்க்கினியருஞ் சிவஞான யோகிகளுந் தொல்காப்பியப் பாயிரவுரையினுஞ் சூத்திரவுரை யினும் "வடக்கு" “எழுத்து" என்பவற்றை மங்கலச் சொற்க எனக் கூறிய தென்னை யெனின், ஒரு நூல் தொடங்கும்வழி ஒரு நற்சொல் நிறுத்துத் தொடங்குதல் நன்றாகலின், அதுபற்றி அங்ஙன மொழிந்தா ரல்லது மங்கலச்சொல் நிறுத்தே தொடங்கல் வேண்டுமென யாப்புறுத்தானும், அங்ஙனங் கூறாதொழியின் அஃதானந்தமா மென்றானுங் கூறிற் றின்மையின் அதனான் ஈண்டைக் காவதோ ரிழுக்கில்லை. இம்முறையினை முன்னோர் யாப்புறுத்தாமையின் ஆன்றோரும் நற்சொற்றொடங்கியுந் தொடங்காமையும் வரையாது

நூலியற்றினார். ஈண்டும் பிறாண்டும் யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் “ஆனந்தக்குற்ற மென்பது தொல்லாசிரியர் யார்க்கு மொப்பமுடிந்ததில்லை” என்பதேயாகலின், இதனை நண்பரும் பிறரும் பிறழ வுணராதிருக்கக் கடவர். இது கிடக்க.

66

பவணந்தி" முதலாயினாரை “அறியார்” “போலிப் புலவர்" என யாமெழுதியது பற்றி நண்பரவர்கள் வருந்து கின்றார்கள். யாஞ்செய்தது பிழையாயின் அதனைப் பொறுக்கும்படி வேண்டுகின்றேம். அவர்களை அங்ஙன மிகழ்ந்துரைக்க வேண்டு மென்பது கருத்தன்று. பண்டையா சிரியர் செய்த கற்புறு பொற்புடைய அரிய நூல்களைப் பயிலவொட்டாது தடையாயெழுந்து பொருத்தமில்லனவு மிடையிடையே கூறிய அப்பவணந்தி முதலாயினர் பெற்றிமைக் கிரங்கி யெழுதுகின்றுழி அச்சொல் வழங்க வொருப்பட்டாம். இனி, உண்மையான் நோக்க வல்லார்க்குப் பவணந்தி முதலாயினர் அறிவுடையோராற் பெரிது பாராட்டு தற்குரிய சீர்ப்பாடுடைய ரல்ல ரென்ப தினிது புலனாம். அவர் தொல்காப்பியனார் முதலான பண்டை நூலாசிரியர் நுட்பப் பொருள் பொதிந்து விளங்குமாறு நூல்செய்ததுபோலத் தாமும் அங்ஙனம் விளங்க நூலியற்றினரா? அல்ல தவரின் வேறாகவேனும் புதுப்பொருள் செறித்தெழுதினாரா? தாமெ ழுதியவற்றையேனும் முடித்து வரையறை தோன்ற வைத்தாரா? ஒரு சிறிது மில்லை. தொல்காப்பியனார் கூறிய அரிய பொருள்களுட் சிலவற்றை விடுத்துச் சிலவற்றை வைத்துத் தஞ்சொல்லாற் சூத்திரஞ் செய்தார். அங்ஙனஞ் செய்வுழியுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/104&oldid=1587211" இலிருந்து மீள்விக்கப்பட்டது