உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் – 21

னாராய்ந்து மேற்கோள் காட்டி விளக்கியிருந்தால், நாம் மேற்குறிப்பிட்டவாறு பலவாறு வினாக்கள் நிகழ்த்த வேண்டிய தின்றாம். அது கிடக்க.

இனி, மங்கலச்சொல் தனித்தும் வரலாம், அடையடுத்தும் வரலாம், முதற்சீரே யன்றி ஒரு செய்யுளி னிடையினுங் கடையிலுமுள்ள சீரினும் வரலாம், எடுத்துக் குறிக்கப்பட்ட மங்கலச் சொற்களே யன்றிப் “பிற” என்பதனால் வேறு பலவும் வரலாம், பரியாயச் சொற்களும் வரலாம். காப்புச் செய்யுளினும் வரலாம், காப்புச் செய்யுளொழிந்து நூற்செய்யுளினும் வரலாம், என்று நியதியின்றிக் கூறினார்கள். இப்படியும் ஒரு விதியுண்டா! இங்ஙனம் விதிகூறும் ஒரு நூலை இலக்கண மென்றுங் கூறலாமா!! இவ்வா றுரைத்தால் எந்த நூலுக்குத்தான் மங்கலங் கூறலாகாது? எந்தச் சொல்தான் மங்கல மாகமாட்டது? மிக அமங்கலமாய் நடக்கும் நூலுக்கும் மங்கலங் கூறலாமே? குன்றக் கூறல், மிகபடக் கூறல், மாறுகொளக்கூறல் முதலான குற்றங்கட் னாய்க் கிடக்கும் இவ்வியங்கோளினையும், இவ்வா. விதிக்கும் நூலினையுங் கற்றறிவுடையோர் மற்கோளாகத் தழுவ ஒருப்படுவரா? ஒருப்படார்! ஒருப்படார்!

கி

L

6

இனி, ஆன்றோர் செய்யுட்கணெல்லாம் மங்கலச்சொற்க ளுண்டெனக் கூறினார்கள். இதனைக் காஞ்சியாக்கத்தில் முன்னரே எடுத்துக் காட்டி மறுத் திருக்கின்றாம்; ஆண்டுக் கண்டுகொள்க. ஈண்டும் விரிப்பிற் பெருகும்.

-

இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆனந்தக்குற்றம் கொள்வாரை மறுத்து, அகத்தியனாருந் தொல்காப்பியனாரு மதுகொண்டிலரென யாப்புறுத் தோதுதல் மேலே காட்டினா மாகலின், அவர்க்கது கருத்தன்றென நண்பர் கூறியது இழுக்கா மென்க.

.

நண்பரவர்கள் இந்திரகாளி செய்த யாமளேந்திரர் பராசைவ முனிவர், சமணரல்ல ரென்கின்றார்கள். இந்திரகாளி யென்னும் இசைநூல் செய்த யாமளேந்திரர் பராசைவ ரென்பது அடியார்க்கு நல்லாருரையிற் பெறப்படுவதன்றி பாட்டியல் செய்த யாமளேந்திர ரென்பது பெறப்பட வில்லை. ஆதலால் பாட்டியல் செய்த யாமளேந்திரரும் இசை நூல் செய்த யாமளேந்திரரும் வேறென்னுங் கருத்துடையேம். இது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/103&oldid=1587210" இலிருந்து மீள்விக்கப்பட்டது