உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

66

69

இனி, ஆசிரியர் - சிவஞானயோகிகள் இலக்கண விளக்க வாசிரியரை மறுத்து "மலையு மகளென அமங்கலப் பொருடந்து தொகையார் பொருள் பலவாய்த் தோன்றிற்று” என்று கூறுதலின், அவர்க்கு அவ்வானந்தக் குற்றங் கோடல் ம்பாடா மென்று நண்ப ரவர்கள் மொழிந்தனர். அது பொருந்தாது. மங்கல மொழி முதல் நிறுத்துக் கூறினாமென் றுரைத்த இலக்கண விளக்க வாசிரியர் தாமேற்கொண்டதற் கேற்பக் குற்றம் படாது மங்கலம் வகுத்துக்கூறல் வேண்டும்; அங்ஙனங் கூறவறியாமற் றாம் மேற்கொண்டதற்கு மறுதலைப் பட அதனைக் குற்றம்பட வைத்தாராகலி னதனை யறிந்து, ஆசிரியர் - சிவஞானயோகிகள் மறுத்திட்டாரல்லது, அக் குற்றங் கோடல் நமக்கு முடன்பா டென்ப ததனா லறிய வைத்தா ரல்ல ரென்க.

-

இனி, நண்பரவர்கள் மாழலனா ரியற்றிய வெனக் கூறிய சூத்திரங்கள், எந்நூலி லுள்ளன? அந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றிற் சேர்ந்த தொன்றா? அல்லது, வேறு தனிநூலாய் ஆன்றோரால் மேற்கோளாகக் கொள்ளப்படுவது தானா? அஃதிப் போது வழக்க முறுகின்றதா? வழக்கமின்றி யொழிந்ததாயின், அச்சூத்திரங் களைத் தான்னூ லுரையாசிரியர் யாரேனு மெடுத்துக் காட்டினாரா? காட்டின ராயின் எவ்விடத்தே? என்று எமக்குப் பலதலையான் ஆராய்ச்சி நிகழ்தலின், நண்பவர்கள் அன்பு கூர்ந்து அவற்றை இனிது விளக்குவார்களாக வென்னும் வேண்டுகோளுடையேம்.

இன்னும் பொய்கையார் முதலான பண்டையாசிரியரும் பாட்டியல் செய்தார்க ளென்பது பன்னிருபாட்டியலால் தோன்றுகின்றது என்கின்றார்கள். அப்படியாயின், அவர் செய்த பாட்டியல் யாது? வேறு நூலுரையாசிரியர் யாரேனு மதனை எடுத்துக் காட்டினாரா? பன்னிரு பாட்டியலும், வச்சணந்திமாலையும் இவ்வழக்கினை முடிவு காண்டற்கேற்ற மேற்கோள் நூல்களாகமாட்டா. இவற்றின் சொற்பொருள்களில் ஐயம் வந்துழி யெல்லாம், எல்லார்க்கும் மேற்கோளா யொப்ப முடிந்த தொல்காப்பிய முதலான பண்டை நூற் கோள் பற்றியுங் களவியலுரை முதலான உரைக்கோள் பற்றியுமே துணிதல் வேண்டும். இவ்வளவை முறைவழாமல் நண்பரவர்கள் தாமெடுத்துக்கொண்ட பொருளைத் தாமே பலவகையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/102&oldid=1587209" இலிருந்து மீள்விக்கப்பட்டது