உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் – 21

போதலின்,

-

வழக்குரையில் அச்சூத்திரங்கள் காட்டப்பட்டவுரை மேற்கோள் காட்டாமல் நண்பரவர்கள் நெகிழ்ந்து அச்சூத்திரங்களை யாரோ சிலர் கட்டி, அகத்தியனார் பெயரால் நடாத்தினா ரென்பது காட்டுவாம். ஆசிரியர் அகத்தியனார் ஆனந்த வோத்துள் அங்ஙனஞ் சூத்திரங்களியற்றி யிட்ட துண்மையாயின், தொன்னூற் பரப்பெல்லாம் ஒருங் குணர்ந் துரை யெழு துவாரான ஆசிரியர் - நச்சினார்க்கினியர் மலைபடுகடாத் துரையில் “பின்னுள்ளோர் ஆனந்தக்குற்ற மென்பதோர் குற்ற மென்று நூல் செய்ததன்றி, அகத்தியனாருந் தால்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையின்" என்றும், தொல்காப்பியவுரையில் இனி ஆனந்தவுவமை யென்பன சில குற்றம் அகத்தியனார் செய்தாரெனக் கூறுப வாகலின், அவையிற்றை எவ்வாறு கோடுமெனின், அவைகள்தாம் அகத்துள்ளும் பிறசான்றோர் செய்யுளுள்ளும் வருதலிற் குற்றமாகா; அகத்தியனராற் செய்யப்பட்ட மூன்று தமிழினும் அடங்காமை வேறு ஆனந்த வோத்தென்ப தொன்று செய்தாராயின் அகத்தியமுந் தொல்காப்பியமும் நூலாக வந்த சான்றோர் செய்யுங் குற்றம் வேறுபடா வென்பது வன்பது" என்றுந் தடை விடைகளாற் காட்டி ஆனந்தவோத்து அகத்தியனார் செய்தாரென்பதிற் றமக் குடம்பாடின்மை கூறி மறுத்த லென்னை? இவர்தா மிங்ஙனம் மறுத்துக் கூறினும், ஏனையுரை யாசிரியரு மிவற்றை எடுத்தாளாத தென்னை? என்று கடாவுவார்க்கு இறுக்குமா றின்மையின், அச்சூத்திரங்கள் அகத்தியனார் செய்தவாதல் செல்லாதென்க. அகத்தியனார் பெயரானும் ஔவை யார், திருவள்ளுவர் பெயரானுங் கட்டி நடத்தப்படும் பாட்டுக்கள் போல் அவையுங் கொள்ளற் பாலனவேயாம்.

இனி ஆசிரியர் -தொல்காப்பியனார் பயனில்லவற்றைக் கிளந்து கூறாது புறனடையா லுய்ந்துணர வைப்பராகலின், அதுபற்றி அவ் வானந்தக் குற்றங் கொள்ள வமையுமெனின்; அகத்தியனார் கூறிய தொன்றை அங்ஙனம் ஒழிபாற் கொள வைத்தாராயின், அவ்வாறு கோடலுமாம்; அகத்தியனாரே அங்ஙன மொன்று கூறினாரென்பதற்குப் பிரமாண மில்லா மையானும், பிராமண முண்டென்பாரை ஆசிரியர் னார்க்கினியர் மறுத்தலானும் அவ்வா றமைத்துக் கோடல் யாண்டைய தென்றொழிக.

நச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/101&oldid=1587208" இலிருந்து மீள்விக்கப்பட்டது