உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

67

திறமறிந் துண்மையான் ஒழுகுகின்றார்கள். இருந்தவாற்றால் நற்றமிழ்ப் பண்டிதர் தமக்கு ளிங்ஙனம் ஒருமித் துறுவ தாராய்ந்து கெழுதகைமை வழுக்காது கேண்மை போற்றி யொழுகுதல் தென்றமிழ் நாட்டிற் கினியுண் டாம் நன்மையினை விளங்கக் காட்டுகின்றது. இது நிற்க.

வான்று முழுமுத

இனி, ஆனந்தக் குற்றமென லறிவினராய் விளங்கிய ஆசிரியர் தொல்காப்பியரானும், அவர் வழிப்பட்டு நூல் செய்த நல்லிசைப் புலவரானும், அந் நல்லிசைப் புலவர் நூல்கட்கு நல்லுரை கண்டு கூறிய நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியரானுங் கொள்ளப்படாமையால், பிற்காலத்தார் கூறினும் அஃது எம்மனோராற்றழுவப்படுவ தன்றென நிறுத்திய எமது மேற்கோளை மறுத்து நண்பர் - சண்முகம் பிள்ளை யவர்கள் உரைத்த நுணுக்க உரையின்கட் கருத்தொருப்படுகின்றிலே மாதலால், அதனை நிரலே யாய்ந்து பரிகரித்து, எமது உண்மைக் கருத்து நிலையிடுவாம்.

ஆசிரியர் அகத்தியனார் ஆனந்த வோத்துள் ஆனந்தக் குற்றத்தினியல்பை விரித்தோதினா ரெனக்கொண்டு, நண்ப ரவர்கள் சில சூத்திரங்கள் எழுதினார்கள். அகத்தியங் கடைச்சங்க மொடுங்கிய பிற்றை ஞான்றே இறந்துபட்ட தென்பது முன்னூலாசிரியர் பின்னூலாசியர் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அகத்தியனார் கூறிய வெனக்கொண்டு காட்டும் அச்சூத்திரங்கள் வந்த வரலாறு யாது? எனின், அற்றன்று; தொல்லாசிரியர் உரைகளி லாங்காங்கு இச்சூத்திரங்கள் காணக் கிடத்தலால் அவை அகத்தியனா ரியற்றிய ப வென்று கொள்ளவமையுமெனின்; நன்று சொன்னாய், தொல்லை உரையாசிரிய ராவார் தெய்வப்புலமை நக்கீரனார், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், பரிமேலழகியார், அடியார்க்கு நல்லார், சிவஞானயோகிகள் முதலியோ ரன்றே? இவ் வாசிரியன்மா ருரைகளில் யாமாய்ந்த வளவில் அச்சூத்திரங்கள் காட்டப்பட்ட தறிந்திலேம்; அல்ல தவை வ காணப்படு முரைப்பகுதியினை நண்பரவர்க ளெமக் கெடுத்துக் காட்டி அறிவு கொளுத்துவார்களாயின், அதன்மேல் நிகழும் நம்மாராய்ச்சியினையுங் குறித்திடுவோம். ஆண்டெழுதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/100&oldid=1587207" இலிருந்து மீள்விக்கப்பட்டது