உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஆனந்தக்குற்றம்- II

து சோழவந்தான் வித்துவான் திரு. அ. சண்முகம் பிள்ளையவர்கள் நிகழ்த்திய தடைகளைப் பரிகரித்து ஸ்ரீலஸ்ரீ - சுவாமி வேதாசல மவர்கள் அவர்கட்கு எழுதிய விடையாகும். இதுவும் 'ஞானசாகரம்' முதற் பதுமத்திலிருந்தே எடுத்துப் பதிப்பிக்கப்பட்டது.பதிப்பாசிரியன்)

சோமசுந்தரக்

காஞ்சியாக்கம்

என்னும்

எதிர்

மறுப்பின்கண் ஆனந்தக்குற்றம் பற்றி யாம் பரிகரித்துரைத்த உரைக்கூறு தமக்கு உடம்பா டில்லாமை காட்டி நம் உண்மை நண்பர் சண்முகம் பிள்ளையவர்க ளெழுதிய வழக்குரை எமக்கு உளந்துளும் புவகை தராநின்றது. அவ் வுரைமுகத்திலே நண்ப ரவர்கள், புழுத்தலை நாயிற் கடைப்பட்ட புல்லறிவோமையும், நா மியற்றிய நூல்களையும் பெரிதெடுத்துப் புகழ்ந் திட்டார்கள். அப்புகழ்ச்சியுரை, தன்கண் நலப்பாடுடைய தாயினும் அதற் கிலக்கா யமைத்துரைக்கப் பட்ட பொருள்களதற் கொருசிறிதுந் தகுதிப்பா டுடையனவாகா. அவ்வாறாகவும் அவை நலக்க வுரை நிகழ்த்திய நண்பரவர்கள் நற்குண மாட்சியினையும், ஒருமைப் பாட்டினையும் மிக வியந்து அவர்கண்மாட்டு எழுபிறப்புந் திரியா வுழுவலுரிமை யன்பு பாராட்டுங் கடப்பா டுடையேம். இன்னும் நட்பின் கெழுதகைமை பற்றி ஒருவர் மாட்டுச் செறிந்த மறுவை தூய்துசெய்தற் கஞ்சி நடுநிலை பிறழ்ந்து அந்நட்பிற் கிழுக்கந் தேடுவார் போலாது, எம்முரையிற் றாங் குற்றமெனக் கண்ட பொருளை யெடுத்து மறுத்து எங்கேளுரிமைக்குச் சிறப்புத் தேடிய நன்முறை, பொறாமை கொண்டு மயங்குந் தமிழ்ப் புலவோர் சிலர்க்கு நல்லறி வுறுப்பாம். இவ்வாறே நல்லறிவு நற்குண மாட்சியுடைய நம் உண்மை நண்பர்களான திரு. சவரிராய பிள்ளை யவர்களும், திரு. இராகவையங்கா ரவர்களும் கேண்மைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/99&oldid=1587206" இலிருந்து மீள்விக்கப்பட்டது