உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

1. ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரநாயகர் வரலாறு

“தெண்ணீர்வயற்றொண்டை, நன்னாடு சான்றோருடைத்து”

- ஔவையார்

ச்செந்தமிழ்த் தென்னாடுமுழுதுங் கல்வியறி வருளொழுக்கங்களிற் சிறந்த சான்றோர்களைத் தொன்று தொட்டு உடையதாயினும், இத்தமிழ்நாட்டின் வடபகுதி யாகிய தொண்டைநாடே சான்றோரை உடைத்தென்ற மேலைத் திருப்பாட்டில் ஏதோ ஓருண்மை இருக்கவேண்டு மென்பது நமக்குத் தோன்றுகின்றது. உலகமெங்கணுமுள்ள சான்றோர்களெல்லாம் புகழ்ந்தேத்துந் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் பிறந்தருளிய இடமாகிய திருமயிலை இத்தொண்டை நாட்டின் கண்ணதாயிருத்தலையும்,

மாணிக்கவாசகப்பெருமான் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளை ஒளிவடிவிற்கண்டு தொழுத திருக்கோயிலாகிய திருக்கழுக்குன்றம் இத் தொண்டைநாட்டின் கண்ணதாகவே விளங்குதலையுந், திருஞானசம்பந்தப்பிள்ளையார் என்பைப்பெண்ணாக்கிய தெய்வ அருட்பெரும்புதுமை நிகழ்ந்ததிருமயிலாப்பூரும் இந்நாட்டின் கண்ணதாயே கழ்தலையுஞ், சுந்தரமுர்த்திநாயனார் சங்கிலியாரை மணந்துவைகிய திருவொற்றியூரும் இதன் கண்ணதாகவே பொலிதலையும், அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறு களையும் உண்மைவழாது துலங்கவிரித்துத் திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் அடிகள் பிறந்தருளிய குன்றத்தூரும் இந்நாட்டின்கண்ணதாகவே வைகுதலையும் உற்று நோக்குங்கால் இத்தொண்டைநாட்டின் கண் இறைவனது அருள்விளக்கமும், அதனைப்பெற்ற பெரியார் தோன்றுதற் கேற்றதோர் இசைவும் உளவாதல் குறிப்பால் உணரப்படும். இன்னும் ஆங்கில அரசுக்கு இத்தென்றமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/110&oldid=1587217" இலிருந்து மீள்விக்கப்பட்டது