உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் – 21

நாட்டுத் தலைநகராய் வயங்குஞ் சென்னபட்டினமும் த்தொண்டை நாட்டின் கண்ணே துலங்குதலும் இதன் பெருமையைப் புலப்படுத்துதற்குப் பின்னுமொரு குறியாம்.

இங்ஙனங் கல்வி அறிவு அருளொழுக்கங்களால் ஆன்ற பெரியார் தோன்றுதற்கும், அவர் இறைவனருள் விளக்கத்தை நேரே காட்டுதற்கும் ஏற்ற தகுதிவாய்ந்ததாகிய தொண்டை நாட்டினுக்கு இஞ்ஞான்று தலைநகராய் வயங்காநின்ற சென்னபட்டினத்தின் மேற்கெல்லையின்கண் உளதாகிய சூளை என்னும் ஊரிற் சோமசுந்தர நாயகர் பராபவ ஆண்டு, ஆவணித் திங்கள் 2 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையிற் (கி. பி. 1846 ஆகஸ்டு 16) பிறந்தனர் இவர்தந்தையார் பெயர் இராமலிங்க நாயகர் என்பது இவர்தம் அன்னையார் பெயர் அம்மணி அம்மையாரென்பது. இவர்தாம் மூத்த பிள்ளை இவர்க்குப் பின் திருவேங்கடசாமிநாயகர், நாதமுனிநாயகர் வரதராசநாயகர் என ஆண்பாலார் மூவருந், தாயாரம்மை எனப் பெண்பாலார் ஒருவரும் பிறந்தனர்.

வர் பிறந்த குலம் நாய்கர் குலம் எனப்படும். 'நாய்கர்’ என்னுஞ்சொல் வாணிக வாழ்க்கை மேற்கொண்டொழுகின மக்கட்குழுவினார்க்குப்பண்டுதொட்டு வழங்கிய தொரு

பெயராதல்,

"இப்பர் பரதர் வைசியர் கவிப்பர்

எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர் ஒப்பில்நாய்கர் வினைஞர் வணிகர் என்று

அத்தகு சிலேட்டிகள் செட்டிகள் பெயரே”

என்னுந் திவாகர சூத்திரத்தால் நன்கு விளங்கும் திவாகரத்திற்குப் பின்னெழுந்ததும், இற்றைக்குச் சிறிதேறக் குறைய 800 ஆண்டுகட்கு முற்பட்டதுமாகிய பிங்கலந்தை நிகண்டு நாய்கர் என்பதனைத் 'தனவைசியர்’ பெயராக வைத்துரைக்கின்றது; அது,

“நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் தாமும் பிறவுந் தனவைசியர்க்கே”

எனக் கூறும் அதன் சூத்திரத்தாற்பெறப்படும். எனவே, பண்டைநாளில் வாணிக வாழ்க்கை மேற்கொண்டு வாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/111&oldid=1587218" இலிருந்து மீள்விக்கப்பட்டது