உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

79

மை

தமிழ்ப்பழங்குழுவினரே ‘நாய்கர் எனவழங்கப்பட்ட துணியப்படும். இன்னுங், கொங்குவேளிர் இயற்றிய பெருங் கதையில் (2,9,4,6)

நாவாய் கவிழ்த்த நாய்கன் போல'

எனப் போந்த உவமைப்பொருளை உற்று நோக்குங் கால், நாய்கர் எனப்பெயரிய இக்கூட்டத்தார் சோமசுந்தர நாயகர் அந்நாளிற் கடன் மேற் கப்பலேறிச்சென்று வாணிகம் ன் நடாத்திவந்தமை அறியப்படும். இந்நாய்கர் கூட்டத்தாரில் ஒரு பிரிவினர் வேங்கடமலைக்கு வடக்கே சென்று குடியேறி, நாய்கர் என்னுஞ் சொல்லை நாய்க்கர், நாயக்கர் நாயுடு எனத் தரித்துத் தமக்குரிய குடிப்பெயராக வழங்கி வருகின்றனர் இங்ஙனம் வடக்கே சென்றுவைகித் தமிழைப் பல்வகையால் திரிபு படுத்திப் பேசிய தமிழ்மக்களே பின்னர் ‘வடுகர்' எனவும், அவர் மாற்றி வழங்கிய மொழியே 'வடுகு’ ‘தெலுங்கு’ எனவும் பெயர் பெற்றமை ஆராய்ச்சியாற் புலனாகின்றது.

நாய்கர் என்னும் பழைய குடிப் பெயரையே இஞ் ஞான்று ‘நாயகர்' என மாற்றி எழுதி வருகின்றனர். என்றாலும் உலக வழக்கில் அவரெல்லாரும் வழங்கி வருதலை உற்று நோக்குங்கால், அச்சொற் பழைய 'நாய்கர்' என்னுஞ் சொல்லின் ஒரு சிறு மாறுதலாகவே காணப்படுகின்றது.

இவ்வாறு வாணிகவாழ்க்கையிற் சிறந்திருந்தமை பற்றி இவர் ‘நாய்கர்' என வழங்கப்பட்ட வழக்கை ஆராயுங்கால், இச்சொற் சிறப்புப் பொருளுணர்த்தும் நகர இடைச் சொல்லினின்று உண்ட ானமை புலனாகின்றது. ஆண் மக்களிற் சிறந்தானை 'நம்பி' எனவும், பெண்மக்களிற் சிறந்தாளை ‘நங்கை' எனவும் வழங்குதலும், 'நப்பின்னை’ நக்கீரன் என்னுஞ் சொற்களிலும் முதல் நின்ற நகரம் ‘சிறந்தபின்னை' ‘சிறந்த சொல்லன்' எனப் பொருடருதலும் போல, நாய்கர் என்னுஞ் சொல்லிலும், நாயன், நாயனார், நாய்ச்சி, நாய்ச்சியார் முதலான சொற்களிலும் நகரம் முதல் நீண்டு நின்று சிறப்புப் பொருள் தலைமைப்பொருள்களைத் தரா நிற்கின்றது. எனவே, நாய்கர் எனப்பெயரிய பண்டைத் தமிழ் வகுப்பினர் அஞ்ஞான்று சிறந்த ஒரு குலத்தவராகப் பாராட்டப் பட்டுவந்தமை நன்கு புலனாகா நிற்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/112&oldid=1587219" இலிருந்து மீள்விக்கப்பட்டது