உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் – 21

அத்துணைச் சிறந்த நாய்கர் குலமானது இந்நாளிற் 'பள்ளி குலம்' எனக் கல்வியறிவாராய்ச்சியில்லாக் கசடர் களால் இழித்துப் பேசப் படுகின்றது. ‘பள்ளி' என்னு ஞ் சொற்பொருள்வழக்கினை ஆராய்ந்து காண்பார்க்கு, அஃது யர்ந்த பொருளைத்தந்து, அப்பெயர்க்குரிய நாய்கர் குலத்தின் மேன்மையினையே நன்கு விளக்காநிற்கும். ‘பள்ளி’ என்னுஞ் சொல் முதலிற் பள்ளமான அல்லது சிறிது குழிந்ததோர் இடத்தை உணர்த்தியதாகும். மான், மரை, வரையாடு, காட்ட முதலான விலங்குகள் தாங்கன்று ஈனுங்காற் சிறிது பள்ளமான இடங்களை நாடிச்சென்று, அவற்றின் கட் கன்று ஈன்று அக்கன்றைப்பாதுகாத்து வெளிக்கொணருங்காறுந் தாம் அவற்றின் கண்ணே தங்கன்றுடன் துயின்று கிடப்பது வழக்கம். ஆகவே, முதலிற் சிறிது குழிந்த இடத்தை உணர்த்திய ‘பள்ளி' என்னுஞ் சொற்பிறகு விலங்கு துயி லிடத்தை உணர்த்துவதாயிற்று அதன்பின், அது மக்கள் துயிலிடத்தையும், அதன்பின் அது அரசன் துயிலும் அரண் மனையையும், அதன்பின் அஃது இறைவன் துயிலுந் திருக் கோயிலையும், அதன்பின், அது சிறார் கல்விபயிலும் பள்ளிக் கூடத்தையும் படிப்படியே பொருள் வளம் பெற்றுணர்த்த லாயிற்று.

இனி இறைவனுக்கு விடியற்காலையிற் புதிதுமலர்ந்த பூக்களால் தொடுத்து அணியப்படும் மலர் மாலை ‘திருப் பள்ளித்தாமம்' எனத் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றது இது, து, திருத்தொண்டர்புராணம் எறிபத்த நாயனார் புராணத்திற்போந்த

66

'வைகறை யுணர்ந்து போந்து புனன் மூழ்கிவாயுங்கட்டி மொய்மலர் நெருங்குவாச நந்தன வனத்து முன்னிக் கையினிற் றெரிந்து நல்ல கமழ் முகையலரும் வேலைத் தெய்வநாயகர்க்குச் சாத்துந் திருப்பள்ளித்தாமங்கொய்து”

என்னுந் திருப்பாட்டினால் அறியப்படும். விடியற் காலத்தே திருக்கோயிலிற் பள்ளியறையில் அமர்ந்த இறை வற்கும் இறைவிக்கும் அணியப்படுவது பற்றி இம்மலர் மாலை ‘திருப்பள்ளித்தாமம்' எனப்பெயர் பெறலாயிற்றுப்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/113&oldid=1587220" இலிருந்து மீள்விக்கப்பட்டது