உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

81

போலும்! இங்ஙனம் விடியற்காலத்தே சாத்தும் மாலை யினைத்தொடுக்குஞ் சிறந்த தெய்வப்பணி, நாய்கர் குலத் தவரில் ஒருசாராராற் செய்யப்பட்டு வந்தமையின் அவர் 'பள்ளிப்பண்டாரம்' எனப் பெயர் பெற்றனர். இஞ்ஞான்றும் பூமாலை தொடுக்குந்திருப்பணியைச் செய்யாநின்ற நாய்கர் குலத்தவர் ‘பள்ளிப் பண்டாரம்' என வழங்கப்படுவதும் யாங் கூறும் வ்வுண்மையினை நிறுவுதற்கு ஒருவலிய சான்றா மென்க. இவ்வாறு நாய்கர் குலத்தவரில் ஒருவகுப்பார்க்கு வந்த ‘பள்ளி பண்டாரம்' என்னும் பெயரில் இறுதிக் கண் நின்ற பண்டாரம் என்னுஞ் சொல் விடப்பட்டு அதன் முதனின்ற 'பள்ளி' என்னுஞ் சொல்மட்டும் அக்குலத்தவரெல்

லார்க்கும் பொதுப் பெயராக இந்நாளில் வழங்கி வருகின்றது.

ங்ஙனமாகப், பள்ளி என்னும் சால்லின் வரலாற்றை நன்காய்ந்துப் பார்க்கும் வழி, அஃதிறைவற்குப் பூமாலை. தொடுக்குந் தெய்வத்திருப்பணியைச் செய்வார் மேலதாய் உயர்ந்ததொரு பெயராய் நிலவுகின்றதே யன்றி, அஃதெவ்வாற்றானும் இழிவு பொருடருவதாய்க் காணப்பட வில்லை. அங்ஙனமாகவும், இழிந்த ஒரு வகுப்பினர்க்குரிய பெயராக மற்றைவகுப்பினர் சிலர் அதனைப் பழித்துப் பேசுவது, அவரது கல்வியறி வாராய்ச்சி யில்லா மடமை யினையே காட்டுகின்றது.

அற்றேல், உயர்ந்த பொருளையுடைய பள்ளி என்னும் சொல் இழிந்த பொருட்டாயதற்குத்தான் ஒரு காரணம் வேண்டுமன்றோவெனின்; அதுவுஞ் சிறிது காட்டுதும் நாய்கர்குலத்தவரிற் பெரும்பாலார் வாணிக வாழ்க்கையிற் சிறந்த செல்வர்களாயிருந்ததுமல்லாமல், அவரிற் சிறுபாலார் சிற்றரசர்களாகவும் இருந்தனர். இச்சிற்றரசர்கள் தமக்கு மேற்பெரிய வேந்தர்களாயிருந்த சேரசோழ பாண்டியர் கட்கு அடங்காமல் அவர்கட்கு டையிடையே இடர் விளைத்து வந்தமையால், அவர்கள் இவர்களைக் ‘குறும் பர்கள்' என்னும் இழிவு பெயர் வைத்து வழங்கலாயினர் அதனாற் ‘பள்ளியர்' என்னுஞ்சொற் குறும்பர்கள் என்னும் இழிவு பொருளிலும் வழங்கப்படலாயிற்றென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/114&oldid=1587221" இலிருந்து மீள்விக்கப்பட்டது