உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் – 21

.

இனி, நாயகரவர்கள் பிறந்த குடி வைணவமதத்தைத் தழுவிய தொன்றென்றும், அதனால் அவர்கள் பெயர் அரங்கசாமி நாயக்கர்' என முதலில் வழங்கியதென்றும் அறிந்தார் சொல்கின்றனர். இஃதுண்மையேயென்றாலும், இவர்களின் தந்தையார் வைணவமதத்திற்குரியவரல்ல ரென்பது, அவர் 'இராமலிங்க நாயகர்' எனப் பெயர் பூண்டிருந்தமையாற் றெளியப்படும். தந்தையார் சைவசமயத் தவராயிருக்க, அவர் ஈன்ற புதல்வர் புதல்வியர்க்கு மட்டும் வைணவர்க்குரிய பெயர் யாங்ஙனம் வந்தனவென்று ஆராயுங் கால், நாயகரவர்களின் அன்னையார் வைணவ குடும்பத்திற் குரியவராயிருக்கவேண்டுமென்பது உய்த்துணரப்படும். சைவ சமயத்தவர் தமது சமயப்பெயர்களையேயன்றி, ஏனைச் சமயப்பெயர்களையும் பூண்டு கொள்வர்; ஆனால், ஏனை மதத்தவரோ தம் மதப்பெயர்களையன்றி ஏனைமதப் பெயர்களைப் பூண்டு கொள்ளச்சிறிதும் ஒருப்படார். 'இராம சாமி' 'கிருஷ்ணசாமி' “நாராயணசாமி' 'பக்கிரிசாமி' முதலான புறச்சமயப்பெயர்களைச்சைவ சமயத்தவர் புனைந்து கொண்டுலவுதலை இன்றைக்குங் காணலாம்; ஆனால், ‘சிவன், சங்கரன், முருகன், விநாயகன், ஈசுவரன் முதலான சைவசமயப் பெயர்களை வைணவராதல் ஏனை மதத்தவராதல் புனைந் துலவுதலையாண்டுங் காணல் இயலாது. ஆகவே,நாயகரவர்களின் தந்தையார் சைவசமயத்தவ ராயிருந்தாலும், அவர்தாம் வைணவ குடும்பத்தினின்றும் மணந்த மனைவியார் விருப்பப் படியே தம்மக்கட்கு வைணவப் பெயர்களையே புனைந்து விடலாயின ரென்பது உய்ந்துணரப்படும்.

யாம் எமது இளமைப் பருவத்தே நாயகரவர்களை அடுத்தகாலையில், அவர்களது இல்லத்தில் நாயகரவர்களின் தந்தையார் இராமலிங்கநாயகரைப் பார்த்து அவரோடு உரையாடியிருக்கின்றேம். அவர் சிறிதேறக்குறைய நாயக ரவர்களின் உருவத்தையே ஒத்திருந்தனர்; அவர் அப்போது எண்பதாண்டு கடந்தவராயிருக்கலாம்; ஆயினும், அவரது யாக்கை திண்ணிதாயிருந்தது; அவரது அறிவு துலக்க முடையதாய்த் தோன்றியது, அவர் எம்முடன் அன்பாக உரையாடிக் கொண்டுவருகையில் “நாலடியார்” லிருந்து ஒரு சய்யுளை எமக்கு எடுத்துக் கூறினார் அச் கூறினார் அச்செய்யுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/115&oldid=1587222" இலிருந்து மீள்விக்கப்பட்டது