உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

83

ல்லை.

இன்னதென்று இப்போதெமக்கு நினைப்பில் நாலடியாரிற் பயிற்சியுடைய ஒருவர் தமிழறிவு வாய்த்தவ ரகத்தான் இருக்கவேண்டும். யாம் அப்போதவருடன் உரையாடிக் கொண்டு வந்ததில், அவர் அறிவிற் சிறந்தவ ரென்றும், அவருடைய உடல்நலமனநலங்களையே அவர்தம் முதற் புதல்வராகிய நாயகரவர்கள் அடையப்பெற்றன ரென்றும் உணர்ந்து மகிழ்ந்தேம். அவர் இசை பாடுவதிலும் சைக்கருவி இயக்குவதிலுந் தேர்ந்தவரென்றும், அவரைச் சேர்ந்தார் சிலர் சொல்லக்கேட்டேம். நாயகரவர்கள் குயிலெனமிழற்றுந்தமது சை யினிமையினைத் தந் தந்தையார்பானின்றே பெற்றனர். மேலும் அவர் முரணான முரட்டுக் குணமுடைய ரென்பதும், நாயகரவர்கள் எமக்குக் கூறிய சில சிறு குறிப்புகளாலும், பிறர் கூறிய சொற்களாலும் உணர்ந்தேம். நாயகரவர்களும், தந் தந்தையார்க்குரிய முரட்டுக் குணமுஞ் சிறு சினமும் உடையவர்களே; ஆயினும் ஆயினும் இவை

ண்டும் இவர்கள் பாற்றக்ககாரணம் இன்றித் தோன்றா. இவை இரண்டும் இப்பெரியாரிடத்தில் நிலைபெற்று நின்ற மையினாலேதான், தமிழ் மொழியின் ஏற்றமுஞ் சைவ சமயத்தின் நுண்ணிய உண்மைகளும் இவர்கள் பானின்றுந் தோன்றிப்பெருகி, இத்தென்றமிழ் நாட்டினையும் இதன் வழியே இந்நில உலகம் முழுதினையும் புனிதமாக்குகின்றன; “அனல் கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினும் நோய் தீர்க்கும்” என்னும் ஆன்றோர் மெய்யுரையை நோக்குங்கால், அறிவிற் பெரியார்பாற் றீயனபோற் காணப்படுவனவும் உலகினுக்கு நன்மையையே பயக்கும் என்பது தெளியப்படுமன்றோ?

இனி, நாயகரவர்களின் பிறப்பு வளர்ப்பு கல்விப்பயிற்சி முதலியவைகளைப்பற்றி விரிவாகத் தெரிந்து எழுதுதற்கு வேண்டுங் கருவிகள் இல்லை. அவைகளைத் தெரிந்தவர்கள் தக்க சான்றுகளுடன் எழுதி அவைகளை எமக்கு உதவு வார்களாயின், நாயகரவர்களின் வரலாற்றை இன்னும் விரிவாக வரைந்து அதற்கு உதவி செய்தவர்களின் பெயர்களுடன் அதனை ஒரு தனி நூலாக வெளியிடுவேம். நாயகரவர்கள், சன்னையிலுள்ள அரசினர் கல்லூரியில் ஆங்கிலமுந் தெலுங்கும் பத்தாம் வகுப்பு வரையிற் பயின்று வந்தனரென்றும், அந்நாளிற் சூளைப்பட்டாளத்தில் நாய்கர் குலத்திற் பிறந்து சங்கராசாரியாரிடம் துறவாடையும் மாயாவாத உணர்ச்சியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/116&oldid=1587223" இலிருந்து மீள்விக்கப்பட்டது