உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

85

வேதங்கள் நூற்றெட்டுஉபநிடதங்கள் காவியங்கள் புராணங் கள் முதலியவற்றின் உண்மைப் பொருள்களை உள்ளவாறு ஆய்ந்து தெளிந்தவர்கள்; அவைதம் முட்பொருண்முரண் நேர்ந்தக்கால், அவற்றுட்பொருந்துவதும் பொருந்தாதும் பிரிந் தினிதுவிளங்கக் காட்டி அவ்வந் நூற் கருத்தும் மெய்ப் பொருளுந் தெளித்துக் காட்டுந் திறத்தில் தமக்கு நிகரில்லாத வர்கள். இவர்கள்தோன்றி அவ்வடநூல்களின் கருத்துண்மை களைக் காட்டாதிருந்தால், தமிழ்மக்களேயன்றிவடநூல் வல்லாருங்கூட அவற்றையறியாதே போயிருப்பர். வடநூற் புலமைமலிந்த பார்ப்பனர்சிலர், சில புராண உபநிடத ஆகமப் பொருள் பற்றி நாயகரவர்களோடு உரையாடி, முடிவில் நாயகரவர்கள் கூறியகருத்தே மெய்யென உடன்பட்டு வியந்ததை யாம் நேரே கண்டிருக்கின்றேம். இன்னும், நாயகர வர்களை முன்பின் அறியாத வேதியர் சிலர், நாயகரவர்களைத் தற்செயலாய் எதிர்ப்பட்டு, அவர்களொடு வேதோபநிடதப் பொருள்களைப்பற்றி உரையாட நேர்ந்த போது, நாயகரவர்கள் மேற்கோளாக அவ்வடநூற்செய்யுட்களைச் சொல்லுமுறை பிழைபடாது மழையெனப் பொழிந்து அவற்றின் பொருண் மலைவு தீர்த்து உண்மையையெடுத்து விளம்ப அவையிற்றைக் கேட்ட அவ்வேதியர்கள் அவர்களைத் தம்மினத்திற்சேர்ந்த ஒரு பேராசிரியரெனவே கருதி வணங்கிச் சென்ற நிகழ்ச்சிகளும் பல.

ஒரு கால் நாயகரவர்கள் ஓர் ஊருக்குத் தனியே செல்ல நேர்ந்து, அவ்வூரிற்றமக்குத் தெரிந்தார் எவரும் இல்லாமை யால், ஒரு பார்ப்பன உணவு விடுதியிற் சென்று அங்குணவு காள்ளும் பொருட்டுச் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள். அந்நேரத்தில் அங்கேவந்து சேர்ந்த பார்ப்பன அறிஞர்சிலர், நாயகரவர்களின் தோற்றப்பொலிவைக் கண்டு, அவர்க ளொடு பேசுதற்கு விழைவுகொண்டு, அவர்களை அணுகிப் பேசாநிற்க, அவர்கள் அவ்வறிஞர்க்குத் தெரியாத பல வேத நுண்பொருள்களையெடுத்துரைப்ப, அவற்றைக் கேட்டு அவர்கள் பால் அன்பு மீதூரப் பெற்ற அப்பார்ப்பன அறிஞர் களும் அவ்விடுதிக்குரிய வரும் நாயகரவர்களை வணங்கி, அவர்களைத் தம்மவராகவே நினைந்து, நறுமணங்கமழச் சமைந்த அறுசுவையுணவூட்டி, அதற்காக அவர்கள் பாற் காசு ஏதும் பெறாமலே வழி விடுத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/118&oldid=1587225" இலிருந்து மீள்விக்கப்பட்டது