உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

❖ 21❖ மறைமலையம் – 21

நூல்

இனி, நாயகரவர்களின் தமிழ்மொழிப்பயிற்சியைக் குறித்துச் சில சொல்லல்வேண்டும். இவர்கள் இளைஞரா யிருந்த காலத்தில், அச்சிடப்பட்டு வழங்கிய நன்னூல், யாப்பருங்கலக்காரிகை முதலான தமிழிலக்கண களையும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலான இலக்கிய நூல்களையுந் திருக்குறள், நாலடியார் முதலான அற நூல்களையும், தேவாரம் திருவாசகம் முதலான பதினொரு திருமுறைகளையும், சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலான பதினான்கு சித்தாந்த நூ ல் களையும், ஒழிவிலொடுக்கம், வள்ளலார் சாத்திரம் திருப் போரூர் சந்நிதி முறை முதலான பிறநூல்களையும் நன்கு பயின்றிருந்தார்கள். மேலும், தமதிளமைக் காலத்தில் தங்குருவான அச்சுதானந்த மாயாவாத வேதாந்தங்கற்பிக்கப்பட்ட, ஞான்று கைவல்யம், ஞானவாசிட்டம், பிரபோத சந்திரோதயம், பிரபுலிங்கலீலை முதலான மாயாவாத நூல்களையுங் கற்றிருந் தார்கள். இவையேயன்றி வைணவ மதத்திற்குரிய நாலாயிரப் பிரபந்தமும் அவற்றின் உரைகளும் ஆராய்ந்தறிந்திருந்தார்கள்.

மற்று, இவர்களது இளமைக்காலத்தில் தனித் தமிழ்ப் பேரிலக்கணமான தொல்காப்பியமும் தனிச்செந்தமிப் பேரிலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, புறநானூறு, கலித்தொகை முதலானவைகளும் அச்சிற்பதிக்கப்பட்டு வெளிவந்தில. இவர்கட்கு 39 ஆம் ஆண்டு நடைபெறும் போதுதான் அதாவது கி. பி. 1885 ஆம் ஆண்டிற்றான் தமிழ்த் திருவாளர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களால் முதன்முதல் தொல்காப்பியப்பொருளதிகாரம் அரிது முயன்று அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டது. கி. பி. 1887 ஆண்டில் திருவாளர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தனிச் செந்தமிழ்ப் பேரிலக்கிய நூலான கலித்தொகையையுந், திருவாளர் உ. வே. சாமிநாதையரவர்கள் ஐம்பெருந்தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றாகிய சீவகசிந்தாமணியையும் வெளிப் படுத்திய ஞான்று நாயகரவர்கட்கு அகவை 41; 1889 - ஆண்டில் ஐயரவர்கள் பத்துப்பாட்டு என்னுந்தன்னிக ரில்லாத் தனிச் செந்தமிழ்ப் பெருநூலை வெளிப்படுத்திய போது, நாயகரவர்கட்கு அகவை 43; 1892 இல் அவர்கள்

ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/119&oldid=1587226" இலிருந்து மீள்விக்கப்பட்டது