உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

87

தமிழ்முதற்பெருங்காப்பியமான யமான சிலப்பதிகாரத்தை வெளியிட்டபோது, நாயகரவர்கட்கு அகவை 46; 1893- இல் அவர்கள் புறநானூறு என்னும் அரும்பெருந்தமிழ்ப் பழ நாகரிகமாட்சி தெரிக்கும் விழுமிய நூலை வெளிப்படுத்திய போது நாயகரவர்கட்கு அகவை 47; இங்ஙனமாக இவ்வரும் பெருந் தமிழ் நூல்களெல்லாம் நாயகரவர்கட்கு முப்பத்தெட் L டாண்டு அகவை சென்ற பின்னர் வெளிப்பட்டமையால், இவர்கள் தமது இளமைக்காலத்திலேயே இவைகளைப் பயின்று தனிச் செந்தமிழ் வளனும் விழுப்பமும் உணர்ந்தின் புறுதற்கு இடமில்லாமலே போயிற்று.

-

ஆம்

ரு

அஃதொக்குமாயினும், அவர்கள் தமக்கு நாற்பதாண்டு நிறைந்தநாள் தொட்டேனும் வெளிப்போந்த அந்நூல் களைப் பயிலாமை என்னையெனின் அதன் உண்மையைச் சிறிது விளக்குவாம். நாயகரவர்கள் முதன்முதல் இயற்றி வெளியிட்ட நூல் வேதபாஹ்யசமாஜகண்டநம் என்று கருதப்படுகின்றது; அதுவெளிவந்த காலம் கி. பி. 1868 ஆண்டென்றுங் குறிக்கப்பட்டிருக்கின்றது அங்ஙன மானால், அப்போது நாயகரவர்கட்கு ஆண்டு இரு பத்திரண்டு தான் ஆக வேண்டும் . இந்நூல், வேதசமாஜம், பிரம்மசமாஜம் எனப்பெயர் பூண்ட புதுக் கூட்டத்தார் உருவவழிபாடு கூடாதென்று வரைந்து வெளியிட்ட ஒருசிறு நூலை மறுத்து உருவவழிபாட்டின் உண்மையினையும் அதுமக்கள் எல்லார்க்கும் இன்றியமையாததாதலையும் விளக்குவான் வேண்டி இயற்றப்பட்டதாகும். ஆகவே, நாயக ரவர்கள் 22 - ஆண்டுள்ள இளைஞராய் இருக்கையிலேயே சமய வழக்குகளிற் புகுந்து பூசலிடுங் கடமையை மேற் கொண்டார்களென்பது தெள்ளிதிற்புலனாம். சமயப்போர்

L

புரிதலிற் றலையிட்டார்க்கு, வடமொழிதென்மொழிகளிற் கடல்போல் விரிந்து கிடக்கும் அறிவு நூல்களை அல்லும் பகலும் இடை டைவிடாதாராய வேண்டியிருத்தலின் அவர் இலக்கண இலக்கிய நூல்களை மிகுதியாய் ஆராய்தல் இயலாது. நாயகரவர்கள் பிரம்ம சமாஜத்தாரை மறுக்கத் தொடங்கிய காலந்தொட்டுச், சமய ஆராய்ச்சியிலேயே தமது கருத்து முழுதும் ஈடுபட்டு நின்றார்களென்பது, இவர்கள் சிவாதிக்யரத்நாவளி எனப்பெயரிய சிறந்த

நூலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/120&oldid=1587227" இலிருந்து மீள்விக்கப்பட்டது