உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

89

இவ்வாறு நாயகரவர்கள் பண்டைத் தனிச் செந்தமிழ் நூல்களைத் தமதிளமைப் பருவத்திலேயே பயின்று புலமை நிரம்புதற்கு இடம்வாயாமையால், தமிழுக்குந் தமிழ்நாட் டார்க்கும் நேர்ந்த இழப்புச் சிறிதன்று. நாயகரவர்களின் அரிய பரிய ஆராய்ச்சியுரைகள் தனிச்செந்தமிழ் உரை நடையில் எழுதப் பட்டிருக்குமாயின் அவை தமிழுக்குப் பெரியதோர் அறிவுக் களஞ்சியமாய் இருந்திருக்கும். ஆனால் அவை வடசொற்கலப்பு மிகுதியும் உடைய உரைநடையில் அமைந்ததே தமிழ்மொழிக்கு ஒரு பேர் இழப்பாயிற்று.

நாயகரவர்களைபோல் வடநூல்களைப் பரந்தாழ்ந்து ஆராய்ந்து, அவற்றின் உண்மைநுண்பொருள்கள் சைவ சமயம் ஒன்றிலே மட்டுந்தான் பொதிந்துளதெனவும் ஏனை வைணவம் L மாயாவாதம் பௌத்தம் சமணம் முதலான மதங்களெல்லாம் வடநூல் தமிழ்நூல் உண்மைக்குமுற்றும் மாறாய்ப் பிற்பிற்காலங்களிற்றோன்றி மக்கள் மெய்யறிவு பெற வொட்டாது தடுத்து அவரைப் பொய்ந்நெறியிற் புகுத்தி மாறாப் பிறவிக் கடலிலே வீழ்த்துவவாயினவெனவும் நன்கு விளக்கி நமதருமைத் தமிழ்மொழியிற் பலநூல்கள் இயற்றியும் பல்லாயிரஞ்சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் பேருதவி புரிந்த பெரியார் இத் தமிழ் நாட்டில் இவர்க்குமுன் எவருமே இல்லை. இவர்க்குப் பின்னும் இதுகாறும் எவருந்தோன்றவே

யில்லை. யாங்கூறும் இவ்வுண்மை, நாயகரவர்கள் இயற்றிய நூல்களை நன்கு கற்றார்க்கும், அவர்கள் நிகழ்த்திய விரிவுரை களைக் கேட்டார்க்கும் விளங்காமற்போகாது. நாயகரவர் களின் விரிவுரையாலும் நூல்களாலுஞ் சமய உண்மைகளை உள்ளவாறறிந்து எல்லாம்வல்ல இறைவன் திருவடிக்கண் மெய்யன்புடையராய் ஒழுகுவார் இத்தென்னா டெங்கணும் இன்னும் உளர். அயல்மதங்களிலிருந்தோர் பலர் இவர்களின் மெய்யுரை கேட்டுத் தமது மதத்தைக் கைவிட்டுச் சைவ சமயம் புகுந்தனர். இவர்கட்கு மாயாவாத வேதாந்த குருவாயிருந்த அச்சுதானந்த சுவாமி என்பவரே தம் மாணவரான நாயகர வர்கள் ஆராய்ந்து நிகழ்த்திய மெய்யுரையால் மெய்யறிவு விளங்கு மாயாவாதத்தைவிட்டுச் சைவ சித்தாந்தம் புகுந்து, தமது பெயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என்று மாற்றிக் காண்டனரென்றால் வர்களுடைய மெய்யறிவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/122&oldid=1587229" இலிருந்து மீள்விக்கப்பட்டது