உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

❖ 21❖ மறைமலையம் – 21

மாட்சியையும் அதனை விளக்குஞ்சொற் பேராற்றலையும் வேறெங்ஙனம் புகலவல்லேம்! இவர்களாற் சைவசிந்தாந்த உண்மையும் மற்றைமதப் பொய்ம்மையும் பிரித்துணர்ந்து தெளிந்து சைவசித்தாந்தத்திற்கு உண்மைத் தொண்டாற்றிய பார்ப்பனரும் பலருளர். அவருள் வெங்கடரமணதாசர், குருசாமி சர்மா, குளித்தளை அரங்கசாமிஐயர் என்னும் வேதாகம சைவசித்தாந்தப் பெரியார் பெயர்களை அறியாத சைவர்கள் இத்தென்னாட்ட கத்திரார். இவ்வந்தணர் மூவரிற் குளித்தளை

அரங்கசாமி ஐயரவர்கள் இஞ்ஞான்றுஞ்

சைவத்தெண்டாற்றி வருகின்றனர். வெங்கடரமணதாசரும், அரங்கசாமி ஐயரவர்களுஞ் சைவ சித்தாந்தம் புகுதற்குமுன் வைணவ மதத்தில் இருந்தோராவர்.

இளமைக்காலத்தில், அதாவது பதினேழாண்டு வரை யில் மாயாவாத நூல் பயிற்சியிலே உழன்று, சைவசித்தாந்த வுண்மை சிறிதும் அறியாதிருந்த எளியேமும், நாயகர்வரகள் நாகைநீலலோசனி திருச்செங்கோட்டு விவேதிவாகரன் என்னுங்கிழமைத்தாள்களில் அஞ்ஞான்று வெளியிடுவித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கற்றும், அவர்கள் அஞ்ஞான்று நாகப்பட்டினத்தில் அடுத்தடுத்துப்போந்து தேன்மாரியெனப் பொழிந்த விரிவுரைகளைக் கேட்டும் மாயாவாதம் முதலான மதப்பொய்ம்மையுஞ் சைவசித்தாந்த மெய்ம்மையும் பகுத் துணர்ந்து தெளிந்து, சைவசித்தாந்தம் புகுந்து, எல்லாம்வல்ல தனிப்பெருந்தெய்வமான சிவபிரான்றிருவடிக்குத் தொண்டு செய்யும் பேறுபெற்றேம்.

இன்னுந், தங்கணவனையிழந்து கைம்பெண்ணாய்ப் போன ஒரு பார்ப்பன அம்மையார் தமக்கு ஒரே மகனாயுள்ள ஓர் இளைஞனை ஆங்கிலங்கற்பித்தற் பொருட்டு ஒரு கிறித்துவர் கல்லூரியில் விடுப்ப, அவ்விளைஞனும் அதில் நன்கு கற்றுத்தேறி, ஆங்கில மொழிப்புலமை யொடு நுண்ணறிவும் பெற்று விளங்கினான். அவன் கற்ற அக்கல்லூரிக் கிறித்துவப் பாதிரிமார் அவனுக்குக் கிறித்து சமய உண்மை களை நன்கெடுத்துப் புகட்டியதோடு, அவனைத் தமது மதத்திற் புகுமாறும் அழைத்தனர். அவ்விளைஞனுங் கிறித்துவ மதக் கொள்கைகள் தன்கருத்துக்கு மிகவும் இசைந்தன வாயிருத்தல் கண்டு, கிறித்துவ மதம் புகுதற்குமுனைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/123&oldid=1587230" இலிருந்து மீள்விக்கப்பட்டது