உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

சோமசுந்தர நாயகர் வரலாறு

91

விட்டான். இதனைத் தெரிந்த அவன்றன் அன்னையாரான அப்பார்ப்பன மாது, தமது மரபில் வேத வியாகரணங்கள் பல்லாண்டு கற்றுப் புகழ் ஓங்கி விளங்கிய சமஸ்கிருத பண்டிதர்கள் பால் அவனை விடுத்து, அவர்களால் அவனைத் திருத்துதற்கு முயன்றார். ஆனால், அவ்விளைஞன், அப் பண்டிதர்கள் எடுத்துக்காட்டிய மாயாவாத வைணவக் கொள்கைகளையெல்லாம் மறுத்துக், கிறித்துமதக் கொள் கைகளே பொருத்தமுள்ளனவென்று நிறுவினான். இங்ஙன மாகச் சமஸ்கிருத பண்டிதர் எவராலும் இந்துமதமே உண்மை யானதென்று அவற்குக் காட்டப்படாது போகவே அவ் விளைஞன் கிறித்துமதம் புகுவது உறுதிப்படலாயிற்று. அவன்றன் அன்னையாரோ தன் ஒரே மகனை உயிரோடு இழந்து விடநேர்வதை நினைந்து நினைந்து அழுதகண்ணுஞ் சிந்திய மூக்கும் உடையவராய் ஆற்றொணாத் துயரம் அடைந்தனர். இது நிகழ்ந்தது திருச்சிராப்பள்ளியிலென்பது கேள்வி. அப்போது அவ்வூரில் நிறுவப்பட்ட சைவசித்தாந்த சபையினர் நாயகரவர்களை விரிவுரை செய்தற்கு அழைத்தனர். நாயகரவர் களும் அதற்கிசைந்து அங்கே சென்று சைவசித்தாந்த விரிவுரைகள் செய்யலானார்கள். அந்நேரத்தில் அப்பார்ப்பன மாதுபடும் ஆறாத்துயர்கண்ட சைவர் சிலர், “அம்மே, இப்போது இவ்வூரில் வந்து விரிவுரை ஆற்றுஞ் சோமசுந்தர நாயகரவர்களின் சைவசித்தாந்தப் பொருள் விளக்கத்தைக் கேட்டால், நும்மகன் கிருத்துமதம்புகான்; ஆகையால் அவனை அவ்விரிவுரைகேட்க அழைத்துச் செல்க." எனக் கூறினர். அது கேட்ட அவ்வம்மையார், “வழுக்கி வீழ்வானுக்கு ஒரு கொழு கொம்பு கிடைத்தாற்" போல மிக மகிழ்ந்து, நாயகரவர்கள் நிகழ்த்திய விரிவுரைகளுக்குத் தம் மகனைக் கெஞ்சி அழைத்துச் சென்றார். அவ்விளைஞன் நாயகரவர்களின் ஒரு விரிவுரையைக் கேட்டதும் அதன்கண் உள்ளம் ஈர்க்கப்பட்டுப் பின்னும் அவர்களின் விரிவுரைகளைக் கேட்கலானான். அவை தம்மைக் கேட்கக் கேட்கச் சைவசித்தாந்தக் கொள்கையே மக்களைக் கடைத்தேற்றுதற்கேற்ற உண்மை உடையதாதல் நன்குணர்ந்து, பின்னர் நாயகரவர்கள் பால் நேரேயுஞ் சென்று, தனக்குள்ள ஐயமெல்லாம் எடுத்தியம்ப, அவர்கள் அவைகளையெல்லாம் முற்றும் நீக்க, அவன் அளவு கடந்த களிப்புடையனாய், உடனே அவர்களின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அவர்கள் அளித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/124&oldid=1587231" இலிருந்து மீள்விக்கப்பட்டது