உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

சால்லி விளங்க

93

விளங்க வைத்தாரல்லர். அதனால் அந்நாள் சைவவொழுக்கத்திற் சிறந்து நின்று சிவ வழிபாடு செய்தாருங் கூட சைவபுராணகதைகள் அறிந்தவரேயல்லாற் சைவ சித்தாந்தஞ் சிறிதும் அறிந்தவரல்லர்; அவரெல்லாம் விழுமிய ஞான நூலென்று பிழைபடக் கருதிப் பயின்றவை களெல்லாம் மாயாவாத வேதாந்த நூல்களே யல்லாற் சித்தாந்த நூல்கள் அல்ல. அத்தகையதான அக்கால நிலை மைக்கு ஏற்பவே வீரப்பசெட்டியாரவர்களுஞ் சிவபுராணங்கள் நன்கோதிச், சிவவழிபாட்டில் உறைத்து நின்றவர்களே யாயினும், மிக வுயர்ந்த ஞான நூல்களெனக்கருதி அவர்கள் பயின்றன வல்லாம் மாயாவாத வேதாந்த நூல்களேயாகும் இப் பெரியார் பிறகு தமது முதுமைக்காலத்தில் நாயகரவர்கள் நாக பட்டினத்திற் பல காற்போந்து பலகால் நிகழ்த்திய அருமருந்தன்ன விரிவுரைகளை ஊன்றிக்கேட்ட பின்னரே, தாம் உயர்ந்த ஞானமெனக் கருதிக் கைக்கொண்ட மாயாவாத வேதாந்தத்தின் சிறுமையுஞ், சைவசித்தாந்தத்தின் பெருமையும் பிரித்துணர்ந்து தெளிந்து மிக உறைப்புள்ள சைவ சித்தாந்தச் செல்வரா யினர்கள்.யாம் நாயகரவர்களின் விரிவுரைகளைக் கேட்கவும், அவர்களியற்றிய நூல்களைப் பயிலவுந் தெரியாச் சிறு பருவத்தே மாயாவாத நூல்களைப் பயின்று கொண்டிருந்த போது, அந்நூற் பொருள்களை நன்கெடுத்து விளக்கவல்லார் வீரப்ப செட்டியாரவர்களே யென அன்பர் சிலர் சொல்லக் கேட்டுச், செட்டியாரவர்கள் பால் அந்நூற்பொருள் கேட்க அடுத்தக்கால், அவர்கள் அவை மாயா வாதப்பொய்ப் பாருள் நிறைந்தவை; அவை தம்மை நீபாடங்ககேட்டல் ஆகாது” எனக் கூறி, அவற்றை எமக்குப் பாடஞ்சொல்ல மறுத்துச் சைவ புராணங்களையே யாம் பயிலுமாறு செய்து வந்தார்கள். இவ்வாறாக, மாயாவாதத்தில் அழுத்தமாய் நின்ற சைவப்பெரியாராகிய வீரப்பசெட்டியாரவர்களே தாம் நீண் காலமாகக் கைக் கொண்டிருந்த மாயாவாத வேதாந்தத்தின் பொய்மை யுணர்ந்து, சைவசித்தாந்த மெய்ம்மைதேறிச் சைவ சித்தாந்த ஆசிரியரானதும் நாயகரவர்களின் விரவுரைகளைக் கேட்டு, அவர்களியற்றிய நூல்களையும் பயின்ற பயிற்சியினாலே யாம் என்பது. இன்னுந், தமிழ் நாட்டறிஞரில் நாயகரவர்களாற் சைவசித்தாந்தம் புகுந்தார் பலருளர்; அவரையெல்லாம் ஈண்டெடுத்துக்காட்டலுறின் இச்சுருக்கவரலாறு மிக விரியும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/126&oldid=1587233" இலிருந்து மீள்விக்கப்பட்டது