உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் – 21

நாயகரவர்களின் பெருக்க வரலாறு எழுதல் நேருமாயின் அதன்கண் அவரையெல்லாம் எடுத்துக்காட்டுங் கருத்துடை யேம். அது நிற்க.

கு

ங் ஙனமாக வடநூல் தமிழ்நூல்களில் அரிதின் உணர்தற்பாலனவாய்க் கிடந்த சமய நுண்பொருள்களை யெல்லாம் எண்ணிறந்த சொற்பொழிவுகளானும், பற்பல நூல்களானும் வெளிப்படுத்தி, இத்தென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடரென உலவித் தமிழ்மக்கள் உள்ளத்துப் பரவிய அறியாமை ருளைப்போக்கி, அவர்க் அறிவொளிகாட்டிய சித்தாந்த ஆசிரியரான சோமசுந்தர நாயகரவர்கள் தாம் அரிது முயன்றெழுதிய பலநூல்களை யுந் தனிச்செந்தமிழ் உரை நடையில் எழுதியிருந்தனர்களாயின் அது தமிழுக்கு அவை தமிழ் மக்கட்கும் விலையிடுதற்கரிய முழுமணிகள் நிறைந்த கருவூலமாய்ச் சிறந்து திகழா நிற்கும். ஆனால், அப்பேறு எம்மனோர்க்கு வாய்த்திலது. விரும்பினால் நாயகரவர்கள் தனித் தமிழ் உரைநடையில் எதனையும் எழுதவல்லவர்களென்பது, அவர்கள் இயற்றிய பலதமிழ்ச் செய்யுட்களானும், ஆசார்யப்பிரபாவம் என்னுந் தமதரிய நூலின் பல இடங்களில் அவர்கள் செந்தமிழ்ச் சுவைபெருக வெழுதிய உரைப்பகுதிகளானும் நன்கறியப்படும். இதற்குச் சான்றாக, இவர்கள் ‘ஆசார்யப் பிரபாவ' நூலின் இறுதியில் திருஞானசம்பந்தப்பெருமான் மேற்பாடியிருக்குஞ் செய்யுட்களில் ஒன்றை ஈண்டெடுத்துக் காட்டுதும்.

“உலக மெலாந் தொழ மன்றுள் ஒப்பில் நடங்குயிற்றும் உமை கேள்வன்

உண்மை, இலக எமக் கருண்மாரி பொழி முகிலே! இன்ப நிலை ஏழையேனுக், கலகில் பெருங் கருணையினாய் அளித்தாய் நின் அருட்பெருமை

யாரேகண்டு

சொலற்குரியார்? வணிகனுயிர் மருகலில் அன்றழைத் தருளுஞ் சுருதி

வாழ்வே! ’

என்னும் இச்செய்யுளிற் 'கருணை' ‘சுருதி’ என்னும் இரண்டே வட சொற்கள்; மற்றையவெல்லாந் தனிச் செந்தமிழ் சொற்களாகும். செந்தமிழ் உரைநடைக்கு இரண்டு பகுதிகள் அந்நூலினின்றே எடுத்து இங்குவரைகுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/127&oldid=1587234" இலிருந்து மீள்விக்கப்பட்டது