உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சோமசுந்தர நாயகர் வரலாறு

95

‘சம்பந்தப்பிள்ளையார் திருவாலவாய்த் திருக்கோயிற் கோபுர வாயிலில் அணையுங்கால், எதிர்ப்பட்ட பண்டி மாதேவியார் ஓர்புறம் ஒதுங்கி அஞ்சலி கூப்பிநின்றனர். அப்போது குலச்சிறையாராகும் மந்திரியார் அவரைச்சுட்டி, 'இவரே பாண்டிமாதேவியார்' என்றஅளவில், சுவாமிவிரைந்து தமது மெல்லிய சிறிய பூம்பதங்கள் பூமியிற் பொருந்த நடந்து, நெற்றியிற் சுட்டி அணிந்து கண்களின் மைதீட்டி விளங்கிய தம் மிளங்குழவிப்பருவத்திருக்கோலம் அவர் கண்டு மகிழ்வெய்த அருகே சேரலுங் கண்களில் நீர்ததும்பத் திரு முலைகளிற் பால் சுரந்திட அவரைவணங்கி எம்பெருஞ் செல்வமேயென வாழ்த்தி யிருகரங்கள் ஆரவெடுத்தணைத்து உச்சிமோந்து முத்தமிட்டு மகிழ்வெய்தின னர்”

6

இதன் கண் ‘அஞ்சலி’ ‘மந்திரி' 'சுவாமி' ‘பூமி’ ‘கரம்’ என்னும் ஐந்து வடசொற்கள் மற்றையவெல்லாந் தமிழ்; சம்பந்தம்' என்னும் வடசொல் ஆளுடைய பிள்ளையார்க்கு இறைவனைக் கண்டபின் வந்த இயற்பெயர். குவிந்து நீண் டிருக்குங் கட்டிடங் ‘கோபுரம்' ஆதலானும், இது தமிழ் நாட்டுத் திருக்கோயில்களிலன்றிப், பழைய வடநாட்டுக் கோயில்களிற் காணப்படாமையானுங் ‘கோபுரம்' என்னுஞ் சொல் வடமொழிக்குரியதாகாது, தமிழ் மொழிக்கே உரித்தா வதாமென்க. 'பதம்' நிலத்தே பதிவதென்னும் பொருளிற் காலடிக்குப் பெயராய் வந்த தமிழ்ச்சொல்.

மேற்காட்டிய செய்யுளாலும் உரைப்பகுதியாலும் நாயகரவர்கள் தாம் வேண்டுமென்று முனைந்தால் உரையும் பாட்டுந் தனித் தமிழிற்சுவைபெருக எழுதவல்லவர்க என்பது நன்குவிளங்கும். அங்ஙனமிருந்தும், அவர்கள் வடசொற்கள் மிகவிரவிய உரைநடையில் தம்முடைய நூல்களை ள இயற்றலானது ஏ னனில், அவர்களது காலத்தில் தனித்தமிழ் எழுதும் பழக்கம் பெரும் பாலும் மாறிப்போயிற்று. இற்றைக்கு அறுநூறு ஆண்டுகட்கு முன்னேயிருந்த உமாபதி சிவனார் என்னுஞ் சைவ சித்தாந்தக்குரவரில் நாலாமவர் காலம் வரையில் தமிழ்மொழி தூயதாகவே வழங்கப்பட்டு வந்தது. அஃது அக்காலம் வரையில் இயற்றப்பட்டு வழங்கிய தமிழ் நூற்பாக்களையும் உரைகளையும் உற்றுநோக்குவார்க்கு நன்குபுலனாம். இற்றைக்கு எழுநூறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/128&oldid=1587235" இலிருந்து மீள்விக்கப்பட்டது