உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் – 21

ஆண்டுகட்கு முன்னிருந்த செய்யுள் நூல்களே யன்றி அந்நூல் உரைகளுங்கூட எத்துணை இனிய தனிச்செந்தமிழ் நடையில் ஆக்கப்பட்டுள்ளன வென்பதை நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்குநல்லார், சேனாவரையர், இளம்பூரணர், நக்கீரனார் முதலான உரையாசிரியன்மார் உரைகளைச் சிறிது பயில்வாரும் எளிதில் அறிவர். இடைக் காலத்துச் செய்யுள் நூல்களைவிட அக்காலத்தெழுந்த மேற்குறித்த உரையாசிரியரின் உரைகளே தனிச் செந்தமிழ் வளன் நிரம்பித் துளும்புகின்றன. மற்று, உமாபதி சிவனார் காலத்திற்குப் பின் வந்த தமிழ் நூல்கள் பலவுமோ வடமொழிக்கண் உள்ள புராணங்கள் காவியங் களினின்று மொழிபெயர்த்துச் செய்யப்பட்டனவாய் முடிந்த மையால் அந்நூல்களை ஆக்கியோர் வடமொழிச் சொற்பொருள் வழக்கையே மிகுதியுந் தழீஇப்பாட்டும் உரையும் இயற்ற லாயினர். வில்லிபுத்தூரர் பாரதச் செய்யுட்களில் வடசொற்கள் மிகுதியாய்க் கலந்திருக்கின்றன. பரஞ்சோதியாரின் திருவிளை யாடற்புராணம், கச்சியப்பரின் திருத்தணிகைப் புராணம் முதலியவற்றிலும் அங்ஙனமே. வைணவ ஆழ்வார்கள் பாடிய நாலாயிரப்பிரபந்தச் செய்யுட்கள் பெரும்பாலுஞ் செந்தமிழ்ச் சாற்களாற் றொடுக்கப்பட்டிருந்தும், அவை தமக்குப் பிற்காலத்தார் வகுத்த உரைகள் முக்காற் பங்குவடசொல்லுங் காற்பங்கே தமிழ்ச்சொல்லும் வாய்ந்தனவாய் இருக்கின்றன. சிவஞான சித்தியார்க்குச் சிவாக்கிரயோகிகளும் ஞானப் பிரகாசரும் வகுத்த உரைகளிலும் அங்ஙனமே முக்காற் பங்குக்கு மேல் வடசொற்கள் விரவியிருக்கின்றன. செந்தமிழ்ச் சொற்பொருள் வளந் துறுமத் தொல்காப்பியப் பாயிரவிருத்தி சூத்திரவிருத்தியுரைகளுஞ் சிவஞானபோதச் சிற்றுரை பேருரைகளுஞ் சிவஞான சித்தியுரையும் வகுத்த ஆசிரியர் சிவஞான முனிவருங்கூடச் சிவசமவாதவுரை மறுப்பாக வரைந்த வழக்குரை நூல்களில் வடசொற்களை நிரம்ப யைந்திருக்கின்றார். என்றாலுஞ், சென்ற ஐந்நூறாண்டு களிற்றொடர்பாய்த் தோன்றிச் சைவ வைணவ நூல்கட்கு உரைகள் வரைந்து விட்ட உரைகாரரால் இறந்து போம் நிலைக்கு வந்த நந்தமிழன்னைக்குப் புத்துயிர் கொடுத்து, அவள் பண்டு போல் எல்லாநலங்களுந்துலங்கி வீறி உலவச் செய்த தனித்தமிழ்ப்பேராசியரியர் சிவஞான முனிவரரே என்பது உணரற்பாற்று. சிவசமவாத மறுப்பாக வர்வரைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/129&oldid=1587236" இலிருந்து மீள்விக்கப்பட்டது