உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

97

இரண்டொரு சிற்றுரை நூல் தவிர இவர்தம் ஏனையுரை நூல்களெல்லாந் தனித்தமிழ் மணங் கமழுந் திறத்தனவா யிருக்கின்றன. அஃதொன்றோ இவருடைய உரை நூல்களிற் பொதிந்து கிடக்கும் அரியநுண் பொருள்களும் உண்மைப் பொருள்களும் அவை தம்மைப் பயில்வாருள்ளத்தை அறிவொளி கொளீஇத் திகழச் செய்யும் பெறற்கரும் பயன்றருவனவாயும் மிளிர்கின்றன. இருந்த வாற்றால், நஞ்செந்தமிழ் தன்பண்டைப் பெருநலன் எய்தி விளங்கச் செய்தபெரியார் ஆசிரியர் சிவஞான முனிவர ரேயாவர் அஃது ணர்ந்து உண்மைத்தமிழ் மக்களனைவரும் அவரை நெஞ்சார வாழ்த்தி வழிபட்டு வருதலே செயற்பாலார்.

ங்ஙனந் தனித் தமிழ்ச் சுடரைத் தூண்டி ஒளிர்வித்த ஆசிரியர் சிவஞானமுனிவரரின் திருவடிச் சுவடு பற்றிப் பின்வந்ததமிழறிஞர், எல்லாரும் பாட்டும் உரையும் இயற்றியிருந்தனராயின் நஞ்செந்தமிழ் மொழி தன் பண்டை மாட்சிகுன்றாப் புத்தெழில் நலங்கனிந்து திகழ்ந்திடாநிற்கும். ஆனால் அதற்குப் பேரிடையூறாக மாயாவாத மதத்தினரும் வைணவ மதத்தினருந் தோன்றி, முக்காற் கூறுக்கு மேல் வடசொற்கலந்த போலித் தமிழுரை நூல்களே இயற்றி எங்கும் பரப்பிவரலாயினர் அவரை எதிர்ப்பான் புக்க சைவ சமய அறிஞர்களும் மற்று அச் சமயத்தவரைப்போலவே தாமும் வடசொற்கலந்த உரை நூல் எழுதுதலையே தமக்குப் பெருமை தரும் ஒருபேரொழுகலாறா மேற்கொண்டு வரலானார். தம்மையே வடமொழிக்குரியவராகப் பிழைபடக் கருதி வடமொழிப் பயிற்சியை உயர்வாகவுந் தமிழ் மொழிப் பயிற்சியை இழிவாகவுந் நினைந்தும் பேசியும் எழுதியும் வருவாரான பார்ப்பனர்களில் ஒரு பாதியார் மாயா வாதிகளாகவும் மற்றொருபாதியார் வைணவர்களாகவும் இருத்தலால் அவர்பால் வடசொற்கலந்த கொச்சைக் கலப்புத் தமிழையன்றித் தூய தனித் தமிழ் வழக்கைக் காண்டல் இயலுமோ? இயலாதன்றே.

ஆகவே, பார்ப்பனர்களுக்குக் குருவான சங்கராசாரி யாரிடம் மாயாவாத உணர்ச்சி பெற்று அவர்க்கு மாணாக்க ராய் முதற்கண் ஒழுகிய அச்சுதானந்தசுவாமிகளும், அவ் வச்சுதானந்தரிடம் L மாயாவாதங்கற்று முதலில் மாயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/130&oldid=1587237" இலிருந்து மீள்விக்கப்பட்டது