உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் – 21

வாதியாய் ஒழுகிய ய நம் நாயகரவர்களுந் தங்குருவையும் அவர்தம் இனத்தவரையும் போற் றாமும் வடசொற் கலப்புமிகுதியும் உடைய வழக்குரை நூல்கள் தமிழில் எழுதலானது ஒரு வியப்பு அன்று; அஃதவர்க்கு அந்நாளில் இயற்கை வழக்காய் இருந்தது. மேலும், நாயகரவர்கள் தமதிளமைக் காலத்திற்பயிலுதற்குப், பண்டைத் தனித் தமிழ் லக்கியங்களிற் பெரும்பாலன அந்நாளில் அச்சேறி வெளிப்போந்திலாமையின், அவர்கள் அவற்றைக் கற்றுத் தனித்தமிழ் மாட்சி அறிதற்கு இடம் பெற்றிலர்களென்பதூ உம் மேலெடுத்துக் காட்டினாம் இவ்வாறாக நாயகரவர்கள் வரைந்த உரைநூல்கள் அத்தனையும் வடசொற்கலப்பு நிரம்ப வாய்ந்தனவாய் தமிழ் ஒன்றே அறிந்த தமிழ் மக்களால் எளிதில் அறியக் கூடாதனவாய் அமைந்ததற்குக் காரணங்கண்டு கொள்க. நாயகரவர்கள் இயற்றிய வழக்குரைநூல்களின் நடையில் வடசொற்கலப்பு மிகுதியும் உளதாதல், சிவா திக்யரத்நாவளி என்னும் நூலின் முதற்பாகத்திற்போந்த,

66

வி தி

சகல

"இவ்வுண்மையறியாமல் சிவாகமங்களுக்கு அப்பிர மாணியம் சொல்லுமிடத்துக் காயத்திரீ மந்திர ஜபபுரச் சரணவிதிகளையும், ஜபநியம ஹோமதர்ப்பணாதி களையும் விளங்கக் கூறுவது ஆகமமேயாதலான் பிராஹ்மண்ய முக்கியமாகிய காயத்திரீ மஹாமந்திரங் களுடைய ஜ ஜபஹோமாதிகளும் அகாரியங்களாகும். இவற்றை விதித்த வேதமும் அப்பிரமாணியமென்பதுதானே பெறப்படும்" என்னும் இவ்விருசொற்றொடர்களில் உள்ள நாற்பத்து நான்கு சொற்களில் ‘இவ்' ‘உண்மை’ ‘ அறியாமல்' 'சொல்லும்' 'இடத்தும்' 'விளங்க' 'கூறுவது ஆகலான்' ‘ஆகிய’ ‘உடைய’ ‘ஆகும்' 'இவற்றை' ‘என்பது' 'தானே' பெறப்படும் என்னும் பதினைந்து சொற்கள் மட்டுமே தமிழ் மற்றை இருபத்தொன்பது சொற்களும் வடமொழியாகும். இத்துணை வடசொற்கள் கலந்த ஒரு நூலைத், தமிழ் ஒன்றே அறிந்த எந்தத் தமிழ்மகனேனுங் கற்று எளிதில் அறிந்து கொள்ளல் இயலுமோ? இயலாதே. இதனாலன்றோ நாயகரவர்கள் மிகவும் ஆராய்ந்தெழுதிய அருமருந்தன்ன நூல்களிற் பல இஞ்ஞான்றுள்ள தமிழ்மக்களாற்றேடிப் பயிலாது கைவிடப்பட்டன? நாயகரவர்கள் இயற்றிய சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/131&oldid=1587238" இலிருந்து மீள்விக்கப்பட்டது