உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

99

நூல்களிற் பெரும்பாலான இங்ஙனமே வடசொற்கலப்பு மிகுதியும் உடையவாய் இருத்தலால், அவை தமிழ் மக்களுக்குப் பயன் படாநிலையிலிருக்கின்றன என்றாலும், வடமொழி வல்லாரைக்கொண்டு நாயகரவர்கள் இயற்றிய நூல்களிற் போந்த வடசொற்கள் சொற்றொடர்களுக்குப் பொருள் தெரிந்துகொண்டு அவையிற்றைப் பயில்வார்க்கு அவை முழுமுதற்கடவுளைப்பற்றிய உண்மைகளையும், மலம் மாயை ருவினைகளைப் பற்றிய இலக்கணங்களையும், இவற்றின் மெய்ம்மைகளைத் தெரிந்து அன்பு அருள் நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுதலால் மக்கள் பெறும் பேறுகளையும், இவைதமக்கு முரணாகப் புரட்டுரை பகர்ந்தார் கோள்களின் பொய்ம்மைகளையும் நன்கு தெருட்டுந் திறத்தனவாய் விளங்கா நிற்கும் என்க.

சிவஞானமுனிவர்

உரை

யாம் நாயகரவர்களின் நூல்களைப்பயின்று அவர்களை யடுத்த இளமைக்காலத்தில் நாயகரவர்களின் உரைநடையைப் போல், வடசொற்கலப்புமிகுதியும் உடைய ஓர் உரைநடை எழுத எமக்கும் ஒருசிறு விருப்பம் உண்டாயிற்று என்றாலும் நக்கீரர் சேனாவரையர் முதலான யாசிரியன் மார் வரைந்த தனித் தமிழ்த் தீஞ்சுவையுரைநடையிற் பெரிது பழகிய எமதுளத்தை வடசொற்கலந்த நடைக்குத் திருப்புவது எளிதில் இயலவில்லை. ஆனாலும், நாயகர வர்கள் நடையினைச் சிறிது சிறிது பின்பற்றி, அஞ்ஞான் றெழுதிய எம்முடைய நூல்களின் இடையிடையே யே வட

66

சாற்கள் சிற்சிலவற்றை இனியமுறையில் இயைத்திருக் கின்றேம். முற்றும் அவர்களைப் பின்பற்றி சொற்களை யாம் அந்நாளிலும் மிகக் கலவாமைக்கு நாயகரவர்களும் ஒரு காரணம் ஆவர். யாம் நாகப்பட்டினத்திலிருந்த அந்நாளில், நாயகரவர்கள் “அகரமுதல எழுத்தெல்லாம் என்னுந் திருக்குறள் முதற்பாவுக்கு ஓர் அரிய விரிவுரை எழுதி விடுத்தார்கள். அதனைக் கண்டமாயாவாதியொருவர் அதனை மறுத்து, அதில் திருவள்ளுவர் கருத்துக்கு முற்றும் மாறான தமது மாயாவாதக் கொள்கையைப் புகுத்தி ‘முதற்குறள் வாதம்’ எனப்பெயரிய ஒரு சிறு நூலை வெளியிட்டார். அதனைக் கண்ட யாம், முதற்றிருக்குறளின் உண்மைப் பொருளை விளக்கிய நாயகரவர்களின் உரையே திருவள்ளுவ நாயனாரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/132&oldid=1587239" இலிருந்து மீள்விக்கப்பட்டது