உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் – 21

தந்நாடு வந்து குடியேறிய அவ்வாரியரின் உயிர்க்கொலை வேள்வியை நிறுத்தி அவரது சிறுதெய்வ வணக்கத்தை ஒழித்து, அவரைக் கொல்லா அறவொழுக்கத்திலும், உருத்திர சிவவழிபாட்டிலும் நிலைபெறுத்துதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தும், தாம் உருத்திரன் மேல் இயற்றிய பதிகங்களையும் அவ்வுருத்திரற்கு உறையுளான பகலவன் திங்கள் தீ என்னும் மூன்றன்மேற்பாடிய பதிகங்களையும் அவர்கொணர்ந்த சிறு தெய்வப்பாட்டுகளுடன் ஊடே ஊடே சேர்த்து இருக்கு வேதம் முதலியவற்றை ஒழுங்கு செய்து கொடுத்தும், அவ்வுயர்ந்த தூய சைவவொழுக்கம், ஊனுங்கள்ளும் உண்டு சிறு தெய்வங்களுக்கு வெறியாடிப் பழகிய அவ்வாரியரது மூளையில் எள்ளளவும் ஏறாமையால், அவர்கள் தாங் குருவென ஏற்றி வைத்த வசிட்டரைக் கொண்டு, விசுவாமித்திர ரையும், அவரினத்தாரானதமிழரையும் அவருடைய சைவக் கோட்பாடுகளையும் பிறப்பிறப்பில்லா முழுமுதலான உருத்திர சிவத்தையும் வரையின்றியே இகழ்ந்து பாட்டுங் கதையும் படைக்கலாயினர்.

அதுமட்டுமோ! தமிழரசர்தமிழ்ச் செல்வர்களிற் சிலரை ஏமாற்றித்தம் வழிப்படுத்தி, அவர்களைக் கொண்டு பெரும்பொருள் செலவு செய்து அவ்வெறியாட்டு வேள்வி களை அடுத்தடுத்து நடைபெறுவித்து, அம்முகத்தால் ஆரியக்குருமார் தொடர்பாகத் தமது பிழைப்புக்கும் வழி செய்து கொண்டனர். ஆரியக் குருமாரின் சூழ்ச்சி இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றுத் தமிழிரின் பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து, ஆரியரைக் கொழுக்கவைத்து வருதலை, அவ் வாரியருந் தமிழருங் கலந்த கலப்பிற்றோன்றிய

ரு

பிறப்பாளர்' என்னும் ஒரு தனிப்பட்ட குழுவினர் கண்டு, தாமும் அச்சூழ்ச்சியினைக் கையாளத் துவங்கித், தாம் அவ்வாரியக் குருமாருடன் சேர்ந்து கொண்டு, அவர் தம் ஆரியமொழியை நன்கு பயின்று, அவர் செய்யும் வெறியாட்டு வேள்விகளை இன்னும் பலமுகமாய்ப் பெருக்கிச் செய்தற்கு வேண்டும் முறைகளையெல்லாம் மேலுமேலும் விரித்துப் 'பிராமணங்கள்' என்னும் வேள்வி நூல்கள் பலப்பல இயற்றினர். இங்ஙனமாக ஆ ரியக்குருமாரும் இரு பிறப்பாளரும் ஒருங்கு சேர்ந்து வெறியாட்டு

வேள்விகளை அளவின்றிப் பெருக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/157&oldid=1587264" இலிருந்து மீள்விக்கப்பட்டது