உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

123

பண்டு தொட்டுப் பிறப்பு இறப்பு இல்லா ஒரே முழுமுதற்கடவுளாகிய சிவத்தை ஒளிவடிவில் வைத்து வணங்கி வந்த தமிழ்மக்கள் இவ்விந்திய நாட்டிலும், இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளில் மேற்கே ஆங்கில நாடு வரையிலுங் கிழக்கே மெகுசிகம் பேருவரையிலும் பரவியிருந்தார்கள். புலப்பட்ட ஒளியுருவாகிய தீக்கொழுந்தோடு ஒப்பச் சமைத்த சிவலிங்க வடிவங்கள் இவ்விந்திய நாடெங்கணும், இதற்குப் புறம்பேமேல் கடற்கரை கீழ் கடற்கரை வரையிலுள்ள எல்லா நாடுகளிலுந்தொன்று தொட்டு இன்றுகாறும் ஆங்காங்கு வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருதலே அதற்கொரு பெருஞ் சான்றாகும், மற்று, இவ்விந்திய நாட்டுக்கு வடக்கேயிருந்த ஆரியரும் அவரோடொத்த மக்களுமோ நாகரிகமில்லாதவர்களாய், எந்நேரமும் உண்டிக்கும் உறையுளுக்கும் மிகவும் மிடிப்பட்டு அலைந்து திரிந்தவர் களென்பது, அவர்கள் தம்மிற்றலைவர்களாய் இருந்து இறந்து பட்ட இந்திரன், வருணன், மித்திரன் முதலானவர்களின் ஆவிகளை வேண்டிப்பாடிய இருக்கு வேதப்பாட்டுகளால் நன்கறியக் கிடத்தலின், அம்மக்கள் அவ்வாவிகளையே தெய்வமாகக் கருதிவணங்கி, அவையிற்றுக்கு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டுவந்தாரல்லது, அவ்வாவிகளுக்கும் அவை போன்ற மற்றை எல்லா உயிர்களுக்கும் அவ்வுயிர்கள் உறையும் எல்லா உலகங்களுக்கும் முதல்வனான ஒருமுழுமுதற்கடவுளை அவர் ஒரு சிறிதும் உணர்ந்தாரல்லரென்பது நன்கு விளங்கா நிற்கின்றது. வடக்கேயிருந்த ஞான்று அவர்கள் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை ள அறியும்அறிவு விளக்கம் வாயா தொழியினும், வடக்கினின்றும் போந்து, இவ்விந்திய நாட்டுட் புகுந்து பண்டைத் தமிழ் மக்களின் பேருதவியால் நன்கு வாழத் துவங்கியபின்னாவது, தமிழரில் மேன்மக்களாயிருந்தார், வழிபாடு செய்து போந்த ஒரே முழுமுதற்கடவுளாகிய உருத்திர சிவத்தை நம்பி, அதன்கண் அன்புடையராகி அதனையே வழிபட்டுத் தம்முடைய சிறு தெய்வ வணக்கத்தையும், அதன்பொருட்டுச் செய்யும் உயிர்க்கொலை வேள்வியையுங் கைவிட்டனரோவென்றாற், சிறிதுமேயில்லை. பண்டைத் தமிழரில் நாகரிக வாழ்க்கையிற் சிறந்த பரதராகிய அரசகுடியினரும், அவர்க்குக் குருவான விசுவாமித்திரரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/156&oldid=1587263" இலிருந்து மீள்விக்கப்பட்டது