உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் – 21

கர்த்தர் ஏசு’ என்னும் பெயரை நம் போன்ற ஒருவர் அப்படியே தமக்கு வைத்துக் கொள்வது பெருங்குற்றம்! அப்படியே உங்கள் சமயாசிரியர் பெயரை இவர் சிறிதும் மாற்றாமல் வைத்துக் கொண்டதும் பெருங்குற்றந்தான்!” என்று நாயகரவர்கள் கருத்தோடு உடன்பட்டுமொழிந்து அவர்களின் நுட்ப அறிவையுஞ் சமயப் பற்றையும் வியந்தனர்.

இன்னும், நாயகரவர்கள் நகராண்மைக்கழகத்தில் வேலையில் அமர்தற்குமுற், சிறிதுகாலம் ஒருதோற்கிடங்கிற் கணக்கு வேலை பார்த்து வந்தனர். அங்ஙனம் பார்த்து வருகையில், ஒருநாள் ஆட்டுத்தோல் மாட்டுத் தோல்கள் தாம் ருந்த கிடங்கிற் பெரும் பெருஞ் சுமையாய் வந்திறங்கின. அவைகளைக் கண்டதும் நாயகரவர்கள் தமது உள்ளங்கணக்கு வேலையிற் செல்லப்பெறாமல், "ஐயோ! எத்தனை ஆடு மாடுகளைக் கொலை செய்து, இத்தோல்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து காசு தேடுகிறார்கள்! கொலைத் தொழிலால் வருங்காசுக்காகவா யானுங்கணக் கெழுதிப் பிழைக்க வேண்டும்!” என எண்ணி வருந்தினார்கள். அதனால், நாயகரவர்கள் வேலையினின்றும் உடனே விலகிப், பிறகு உ சன்னை நகராண்மைக் கழகத்தில் எழுத்தாளராய் அமர்ந்தனர்.

டு

இனி, நாயகரவர்கள் சென்னை நகராண்மைக்கழகத்தில் வேலை பார்த்து வந்தது தமது முப்பத்தைந்தாம் ஆண்டு வரையிலேயாம். அக்காலத்தில் வைணவமதத்தினரும் மாயாவாதமதத்தினரும் பெருந்தொகையினராய்ப் பெருகிப் பொய்யான கதைகளை மிகுதியாகப் புனைந்து கட்டிப், பொதுமக்கள் எவர்க்குந் தெரியாத சமஸ்கிருதமொழியிற் புராணங்கள் இதிகாசங்கள் என்னும் பெயர்களால் அவை தம்மை எழுதி வைத்துக்கொண்டு, சைவ சமயக் கோட்பாடு களையும் முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானையும், அவனடியார்களையும் வாய்கொண்ட மட்டும் ஏசியும் பழித்துங், கைகொண்ட மட்டும் அவ்வேச்சுரை பழித்துரை களை எழுதியும், பெரும்பாலுஞ் சைவ சமயத்தினராய் இருந்த பொதுமக்கள் உள்ளத்தை நிலைகலக்கி, அவரிற் பலரைத் தம்முடைய வைணவமதத்திலும் மாயாவாதமதத்திலுஞ் சேர்த்து வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/155&oldid=1587262" இலிருந்து மீள்விக்கப்பட்டது