உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சோமசுந்தர நாயகர் வரலாறு

121

நாயகரவர்களும் அதற்கிசைந்து, “அக்கடிதத்திற் குறித்தற்கு உங்கள்பெயர் யாது?” என்று வினவினார். வந்தவர் “என் பயர் சுந்தரமூர்த்தி சுவாமி" என்று விடை என்று விடை கூறினார். அதனைக் கேட்ட நாயகர் மிக்க சினங்கொண்டு, “சைவ சமயாசிரியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் பெயரை நீர் அப்படியே வைத்துக் கொள்வது பிசகு, பெருங்குற்றம் . சுவாமி என்னும் பின்னுள்ள சொல்லைவிட்டுச் சுந்தரம் என்று தனியாகவேனும், அல்லது சுந்தரமுதலி பிள்ளை, செட்டி என ஏதேனும் வேறொரு சொல்லை அதனுடன் சேர்த்தேனுங் கூறுவீரானால் மட்டும் நீர் மட்டும் நீர் விரும்பும் உதவிக் கடிதங் கொடுக்கலாம், இல்லையேல் முடியாது” என்று அழுத்தமாய்ச் சொன்னார். வந்தவர் அது கேட்டு வெகுண்டு, “என் பெயரை நான் சொல்லுகிறபடி எழுதாமல், உமது விருப்பப்படி மாற்றச் சொல்வது தகாது” எனப்புகன்றார். அதற்கு நாயகரவர்கள், அப்படியானால், நீர் விரும்புகிற கடிதம் எம்மால் தர முடியாது போம்” என்று மறுத்துவிட்டார். உடனே அவர் அக்கழகத் தலைவராயிருந்த வெள்ளைக்காரத் துரையிடம் நேரே சென்று, தாம் தம் பெயர் சொல்லி எழுத்தாளரிடம் உதவிக் கடிதங் கேட்டதையும், அது கொடாமல் அவர் மறுத்ததையும் முறையிட்டுக் கொண்டார். அது கேட்ட துரை மகனார் நாயகரை உடனே தம்பால் வருவித்து, அவர் கேட்ட கடிதங் கொடாத காரணம் என்னென்றார். அதற்கு நாயக ரவர்கள்,“எங்கள் சைவ சமயாசிரியர் பெயரைச் சிறிதும் மாற்றாமல் இவர் தமக்கு வைத்துக் கொண்டு அதனை அப்படியே எழுதச் சொல்கிறார். அஃது அவ்வாசிரியரை இகழ்ந்ததாகும்; ஆதலால், அவர் வேண்டியபடி யான் செய்யவில்லை” என்று விடை கூறினார். அது கேட்டதுரை மகனார் நகைத்து,"இவர் தமக்கு வழங்கும் பெயரைச் சொன்னால், அஃது உங்கள் சமயாசிரியர் பெயர், அதனை அப்படியே சொல்லக்கூடாது என்று நீர் சொல்வது பொருத்தமாயில்லையே" என்றார். அதற்கு நாயகர், “நல்லது! ஐய, உங்கள் மதத்தைச்சேர்ந்த ஒருவர் ‘என் பெயர் கர்த்தர் ஏசு (Lord Jesus) ' என்று எழுதச்சொன்னால் தாங்கள் அதனை ஒப்புவீர்களா?" என்று எதிர்வினாவினர், அவ்வறிவுரை செவிப்பட்டதும் அத்துரைமகனார், 'ஆ! அப்படியா!’

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/154&oldid=1587261" இலிருந்து மீள்விக்கப்பட்டது