உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

❖ 21❖ மறைமலையம் – 21

கைவிடப்பட்டது. இவனது குரலோசை குயிலோசையினும் இனியது. இவன் தேவார திருவாசகச் செய்யுட்கள் சில பாடக் கேட்டாற் கருங்கன் மனமுங் கரைந்துருகும். நல்லியற்கையும், நல்வடிவும் வாய்ந்த இவ்வருமை மகன் கல்வியறிவு வாயா திருந்தது நாயகரவர்கட்கு ஒரு மனக்குறை. ஆனாலும், ஒன்றுக்கும் பற்றாத எம்மையும் நாயகரவர்கள் தம் அருமை மகனிலும் மேலாகப் பாராட்டி வந்தமையால். எமது கல்வியறிவின் ஏற்றத்தைக் கண்டு தமக்குள்ள அம்மனக்குறை தீர்ந்து போயிற்றென்று பலகாற்சொல்லியிருக்கின்றனர். அவர்கள் அங்ஙனம் எம்மைத் தம் மகனாக் கொண்ட உண்மை, அவர்களும், அவர்கள் அருமை மனைவியாரும் புதல்வியர் புதல்வர்களும் எல்லாம் எம்மையும் எம் மனைவியையும் அடுத்தடுத்துத் தம் இல்லத்திற்கு வருவித்தும் யாம் போக இயலாத நாட்களில் எமதில்லத்திற்குத் தாமே வந்தும் ஒருங்கு அளவளாவிப் பாராட்டிய பேரன்பினால் எல்லார்க்கும் நன்கு விளங்கியது. சிவநேயப்பெருஞ்செல்வம் நிரம்பிய அத்தெய்வக் குடும்பத் தாரோடு அன்பினால் உடன் கலந்து மகிழ்ந்த அந்நாட்களே எமதுவாழ்க்கையில் மிகச் சிறந்த நாட்கள், அத்தயை சிவநேய வாழ்க்கை இன்னும் ஒரு கணம் கிட்டுமோ நினைக்குந்தோறும் எந்நெஞ்சம்

என்பதனை உருகுகின்றது!

நீராய்

மேற்குறிப்பிட்ட நால்வரைத் தவிர நாயகரவர்கட்கு வேறு மக்கள் இலர்.

னி, நாயகரவர்கள் தமதில் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் பெறுதற் பொருட்டுச் சென்னை நகராண்மைக் கழகத்தில் எழுத்தாளராய் அமர்ந்து வேலை பார்த்து வந் தனர். இவரது அறிவின் நுட்பத்தையும் வேலைசெய்யுந் திறமையையுங்கண்ட கழகத்தலைவரும் அவர்க்குக் கீழ் உள்ளவர்களும் இவரை மிக்க நன்கு மதிப்புடன் நடத்தி வந்தனர். வேலை பார்த்த கழகத்திலும், இவர்தமது சைவசமய ஒழுக்கத்திற்கு அஃது இடர் பயவாத முறையில்வைத்தே அதனைப்பார்த்து வந்தனர். ஒரு கால் ஒருவர் அக்கழகத் தினின்றும் ஓர்உதவிக் கடிதம் பெறுதற்குவந்து, முதலில் எழுத்தாளராயுள்ள நாயகரவர்களைப் பார்த்துப்பேச,

ர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/153&oldid=1587260" இலிருந்து மீள்விக்கப்பட்டது