உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

119

காய்ச்சல் நோயாய்க் கிடந்து அது தீர்ந்து எழுந்தால், விரைந்து நல்லெண்ணெய் முழுக்குச்செய்வியாதீர்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது! அக்கடிதம் சிறிது நேரத்திற்கு முன்னே கிடைத்திருந்தால், அக்குழந்தைக்கு நல்லெண்ணெய் முழுக்குச்செய்வித்திரோம்! ஆனால் அக்கடிதம் அதற்குப் பிந்திப் போயிற்று! சிவச்செயல் எண்ணெய் முழுக்குச் செய்வித்த சிறிது நேரத்திலெல்லாம் அக்குழந்தைக்கு மீண்டும் மிகக் கடுமையான குளிர் காய்ச்சல் கண்டது! அன்றிரவே அது சிவநினைவோடு உள்ளங்களித்து உயிர் நீத்தது! அம்மகள் மற்றை என் புதல்வியரைவிட என்பால் அளவிறந்த அன்பு பாராட்டி வந்தமையாலும், அதன் சிவ நினைவு எந்நேரமும் என் உள்ளத்தில் ஓர் அரிய தெய்வவுணர்ச்சியினையும் உருக்கத் தினையும் உண்டாக்கி வந்தமையாலும், அதன் பிரிவை யான் நெடுங்காலம் ஆற்றக் கூடவில்லை. நனவிலுங்கனவிலும் அதன் அழகிய உருவம் எனக்குப் பல காற்றோன்றி, ‘நான் இங்கே சிவபிரானொடு மகிழ்ந்திருக்கையில் நீங்கள் ஏன் என்னைக் குறித்து இவ்வளவு துயரப்படுகிறீர்கள்?' என்று சொல்லிக் கொண்டுவந்து, கடைசியாக ஒருநாள் 'இனிமேல் நான் இங்கே வரமுடியாது, நாயனா, எனக்காக நீங்கள் இனி வருந்த வேண்டாம்' என்று சொல்லி மறைந்து போயிற்று. அதன்பின் அக்குழந்தையின் உருவம் என் கண்களுக்குப் புலனாவதில்லை’ என்று எமக்கு நேரே ஆற்றாமைப்பட்டுக் கண்ணீர் வாரக் கரைந்துருகிக் கூறிய மொழிகளிலிருந்து, நாயகரவர்களின் மூன்றாம் புதல்வியாரான லோகாம்பாளின் அருமையினை யுணர்ந்து வியப்புற்றேம்.

இனி, நாயகரவர்களின் நான்காம் பிள்ளையும் ஒரே மகனுமான சிவபாதம் பொன்வடிவாய் நீண்டுயர்ந்த அழகிய பிள்ளை, அமைதியான இனிய குணம் வாய்ந்தவன். ஆனால், இவற்கு மூளை வலுவில்லை. இவனை உயர்ந்த தமிழ்க் கல்வியிற் பயிற்ற நாயகரவர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் அது கைகூடவில்லை. நாயகரவர்களின் விருப் பத்திற்கிணங்கியாம் இவற்குப் பெரியபுராணவுரை சிறிது காலங்கற்பித்து வந்தேம். சொன்ன சொற்பொருளைத் திருப்பிச் சொல்ல இயலாத அத்துணைமறதி இப் பிள்ளைக் கிருந்தமையால், யாம் நெடுகக் கற்பித்தலும் இயலாது

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/152&oldid=1587259" இலிருந்து மீள்விக்கப்பட்டது