உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

❖ - 21❖ மறைமலையம் – 21

இனி, மூன்றாம் புதல்வியாரான லோகாம்பாளை யாங்க கண்ட தில்லையாயினும், நாயகரவர்களே, “எம் மூத்த மகளிர் இருவரினும் பார்க்க அக்குழந்தை பேரழகு வாய்ந்தது. எந்நேரமுந் தெய்வநினைவே உடைய அஃது இறைவனுக்குத் தனியிருந்து வழிபாடு ஆற்றுங்காலங்களில் ஒவ்வொரு நாள் அது கடவுளொடு பேசும் ஒலிகேட்டு, யாங்கள் திடுக்கிட்டு, அஃதிருக்கும் அறையினருகே சென்று நோக்கினால், அது தன்னை மறந்திருக்கக் கண்டு திகைப்பதுண்டு. அது பெரிய பிள்ளை ஆன பின்னுங் கடவுள் நினைவே முதிரப்பெற்று, உலகியல் நினைவு வரவர நழுவலாயினமை கண்டு அது நீண்ட எண்ணம் எங்களெல்

நாள் உயிர் வாழாதென்னும் 6

66

லார்க்கும் உண்டாகி எங்கள் எல்லாரையுந் துயரக் கடலுள் ஆழ்த்தியது. இறைவனுக்கு வழிபாடு செய்யும்போது அது கடவுளுடன் பேசும் ஒலி கேட்டு யாங்கள் வெருக்கொண்டு அதனருகே சென்று “அம்மா, யாருடன் பேசுகின்றாய்?” என்று வினவினால், "இதோ,ஆண்டவனுடன்பேசுகின்றேன், இதோ அவர் என்னுடன்பேசுகிறார், சிரிக்கிறார்! நீங்களும் பாருங்கள்!” என்று எங்களுக்குச் சொல்லும்; ஆனால், எங்கள் கண்களுக்கு ஒன்றும் புலனாவதில்லை. இவ்வாறு, சிறிது காலம் நடந்துவந்தபின், அக்குழந்தைக்குச் சடுதியிற் காய்ச்சல் நோய் வந்தது. காய்ச்சலாயிருக்கும்போது, அஃது “என் ஆண்டவன் பாற்போகின்றேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லும். அது கேட்டு யாங்கள் மனம் நைந்து, 'அம்மா, அப்படிச் சொல்லாதே" என்று வேண்டினால், அதற்கது, ‘ஏன்? என் ஆண்டவனிடம் செல்வது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கின்றது. சற்றுப் பொறு, பொறு, அழைத்துக் கொள்ளு பாறு,பொறு, கிறேன்' என்கிறார் என்று கூறுவதுகேட்டுப் பின்னும் எங்கள் மனம் பெரிதுங் கலங்கலாயிற்று! அக்குழந்தைக்கு வந்த அக்காய்ச்சல் நோய் தீர்ந்து அது பிழைத்திருக்க வேண்டு மென்று சிவபெருமானை வேண்டி வந்தோம். காய்ச்சல் நோயுந் தீர்ந்தது. பின்னர்ச் சிலநாட்கழித்து, அப்பிள்ளைக்கு நல்லெண்ணெய் தேய்த்துத் தலைமுழுக்குச்செய்வித்தோம், அங்ஙனந் தலைமுழுக்குச் செய்விக்கையில், வெளியூரிலுள்ள அன்பர் ஒருவரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அதனைப் பிரித்துப் பார்க்க, 'எவரேனும் உங்கள் வீட்டிற்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/151&oldid=1587258" இலிருந்து மீள்விக்கப்பட்டது