உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயர்

சோமசுந்தர நாயகர் வரலாறு

117

புதல்வியார் பெயர்'ஜகதாம்பாள்” இரண்ட ஜகதாம்பாள்' .இரண்டாம் புதல்வியார் 'விசாலாட்சி'; மூன்றாம் புதல்வியார் பெயர் 'லோகாம்பாள்';கடைசிப் புதல்வர் பெயர் 'சிவபாதம்'. யாம் நாயகரவர்களை அடைவதற்கு முன்னமே மூன்றாம் புதல்வியாரான லோகாம்பாள் காலமாய் விட்டனர். அதனால், அவரைத்தவிர மற்றை மூவரையுமே யாங்காணாப்பெற்றேம். புதல்வியரும் புதல்வரும் மிக அழகியர். மூத்த புதல்வியார் வண்மையிற் பொன்மை கலந்த பொற்பாவை போல் திகழ்ந்தனர்; இவர் மிக்க சதையாயும் மிக ஒல்லியாயும் இராமல் நடுநிலைப்பட்ட அழகிய உடம்பினார்; ஆனால் வடிவம் சிறிது குள்ளமானது இரண்டாம் புதல்வியாரான விசாலாட்சி நறுந்தாமரை இதழிற் செம்மை கலந்தாற் போன்ற நிறம் வாய்ந்தவராய், வியக்கத்தக்க அழகிய சிறு செவ்வண்ணம் ஆற்றித் தீற்றிய சலவைக் கற்பாவைபோல் ஒளிர்ந்தனர். இவரதுடலம் சிறிது சதை கூடியதாய்க் கொழுகொழுவென்று எழில் கனிந்து இலங்கியது. இவரது வடிவம் மிக உயரமாயும் மிக குள்ளமாயும் இராமல் நடுநிலை வாய்ந்ததாய் விளங்கிற்று; பிறைவடிவு போற்றோன்றிய இவரது நெற்றிமேல் நெளி நெளியாய் வகிர்ந்து படர்ந்து நீண்ட கருங்கூந்தல் அவிழ்ந்து தொங்கச் சிலகால் இவர் தோன்றிய போது, இவர் வானுலகத்து அரம்பை மாதர்தாமோவெனக் கருதிவியக் கலானேம். இப்புதல்விமார் இருவருடைய முக அமைப்பும் பெரும்பாலும் நாயகரவர்களின் முகவமைப்பைத் தெளித் தெடுத்து வைத்ததுபோல் விளங்கிற்று. இவர்கள் இருவரும் உரிய காலத்தே மணஞ்செய்விக்கப்பெற்றுத், தங்கணவன் மாரோடு இணங்கித்தமது இல்வாழ்க்கையினை அமைதியாய் இனிது நடத்திவந்தனர். பெண்பாலார்க்குக் கல்விப் பயிற்சி ஆகாது என்னும் பொருந்தாக் கொள்கையில் நாயகரவர்கள் கடைப்பிடியாய் நின்றமையால், அவர்கள் தம் புதல்விமாரைக் கல்வியறிவு பெறாதநிலையிலேயே வைத்து விட்டார்கள்! என்றாலும், நாயகரவர்களின் இயற்கை நுண்ணறிவு அவர்தம் புதல்வியரிருவரிடத்தும் பதிந்து நின்றமையால், அவர்கள் இருவரும் உரையாடுங்காற் கல்வியறிவுடையார் போலவே

காணப்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/150&oldid=1587257" இலிருந்து மீள்விக்கப்பட்டது