உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் – 21

உயிர்

முதன்மையான பகலுணவைப் பலநாளும் மிகவும் வேளை தவறியுட்கொண்டு இடையிடையே நோயாற் பற்றப்பட்டு, வரவர உடம்பின் நலம் பழுதுறலானார்கள். அவ்வப்போது செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்காகச் செய்து வந்திருந்தால், திண்ணியயாக்கையுடைய ய அவர்கள் நூறாண்டு வாழ்ந்திருக்கலாம். ஓய்ந்திருக்குங்காலங்களில் அம்மையார் நாயகரவர்களை வேண்டி, உணவு கொள்ளும் நேரம் அணுகுங் கால், எவருடன் ன் உரையாடிக்கொண்டிருந் தாலும் அதனை இடையே தடுத்து அவர்களை அழைத்துக் கொள்ளும் ஒரு சிறந்தஉரிமையைத் தமக்கு அளிக்கும்படி கேட்டு, அவர்களை அதற்கு இணக்கியிருக்கலாம். அங்ஙனம் வேண்டிக் கேட்டால் நாயகரவர்களும் அதற்கு இணங்கத் தக்கவர்களே. ஆனால். அம்மையார் அதுகேட்க அஞ்சி வாளாஇருந்ததுதான் அவரது இல்வாழ்க்கையில் ஒரு பெருங் குறைபாடாய் முடிந்தது.

துவக்கத்தில் எமது இல்வாழ்க்கையிலும் இத்தகைய குறைபாடிருந்தது. ஆனால், எம் மனைவியார், யாம் வேளை தவறிஉணவெடுப்பதால், தாமும் எம்மக்கள் எழுவரும் நெடுநேரம் பசித்திருந்து, பசிஅவிந்த பின் உணவெடுத்து நோயால் துன்புற வேண்டியிருக்கின்றதே! என வருந்தித் தமது குறையை அறிவிக்க, “எவரோடு எக்காலத்து எத்துணைச் சிறந்த பொருளைப்பற்றி யான் உரையாடிக் கொண்டிருப்பினும், அவ்வேளைக் கடமைகளைச் செய்தற்குரிய காலம் அணுகுகை யில், அவைகளைச் செய்தற்கு நீ என்னை அழைக்கலாம்" என்று அவர்க்கு அவ்வுரிமையினை யாம் வழங்கிய காலந் தொட்டு, எமது இல்லியல் இடர்ப்பாடின்றி இன்றும் இனிது நடைபெறா நிற்கின்றது.

இங்ஙனமே சிவஞானத்தம்மையாருஞ் செய்திருந் தால், இத்தமிழ்நாடு, நாயகரவர்களால் இன்னும் எவ் வளவோ பெறற்கரும்பயன்களெல்லாம் பெற்றிருக்கும். இதுகொண்டு, பெண்பாலார் தங்கணவர் பால் அச்சம் மிகுதியும் உடையராய், வீட்டுக் கடமைகளைக் காலத்தோடு ஒட்டி ஒழுங்குற நடவாது விடுத்தல் எவ்வளவு பொல்லாங் குக்கு இடமாமென்பது நன்கு விளங்குகின்றதன்றோ?

இனி, நாயகரவர்கட்கு நாற்பதாண்டு நிரம்பும் முன் மூன்று புதல்வியரும் ஒரு புதல்வரும் பிறந்தனர், அவருள்மூத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/149&oldid=1587256" இலிருந்து மீள்விக்கப்பட்டது