உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

முடிப்பர்.திருவமுது

115

அவர்கள் வேண்டியதை உடனே நகை முகத்துடன் செய்து ப்பர். திருவமுது கறியமுதுகள் இன்சுவை முதிர நறு மணங்கமழச் சமைப்பதிலும், அவை தம்மை அடியார்க்கும் விருந்தினர்க்கும் அகங்குளிரப் படைப்பதிலுந் திறமை வாய்ந்தவர்.

அம்மையார் நாயகரவர்கட்கு மிகவுங் கீழ்ப்படிந்தொழு கியதில் ஒரு தீங்குண்டு. பகற்பொழுதில் தலைமுழுகுதல், வழிபாடாற்றுதல், உணவெடுத்தல், ஓய்ந்திருத்தல் முதலிய இன்றியமையாக் கடமைகள் எல்லாம் நாயகரவர்கள் இல்லத்திற்பெரும்பாலும் வேளை தவறியே நடைபெறா நிற்கும். நண்பகல் ஒருமணிக்கு நடைபெறவேண்டிய இவை கிட்டத் தட்டச் சாயங்காலவேளையிலேதான் நடைபெறும். இதற்குக் காரணம் என்னென்றால், பகற்காலத்தில் நாயக ரவர்களைக் காணவருவாரும், அவர்களின் அருமருந்தன்ன ஆராய்ச்சியுரைகளைக் கேட்கவருவாரும் பலர், நாயகர வர்கள் அவர்களுடன் உரையாடத் துவங்கிவிட்டாற் காலம்போவது அவர்கட்குச் சிறிதுந் தெரிவதில்லை. ஒரே மூச்சில் நாலைந்து மணிநேரம் அவர்கள் பேசிக் கொண் டிருந்ததையும் யாங்கண்டதுண்டு. உச்சிவேளையில் அன்பர் கள் எவரேனுங் காணவந்தால், அவர்களை இருத்திப் பிற் பகல் மூன்று மூன்று அல்லது நான்குமணி வரையிலுங்கூடப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். வெந்நீர் அடுப்பில் வெந்நீர் காய்ந்தபடியாகவேயிருக்கும். இறைவனை வழிபடுதற்குக் காணர்ந்து வைத்த மலர்கள் வாடியபடியே யிருக்கும். செவ்விதின் அமைத்த சோறு, கறிகுழம்பு, மிளகுநீர் முதலியன வெல்லாம் ஆறிப் பதம் மாறியபடியாகவே இருக்கும். அம்மையாரும் பசி பொறுத்தபடியாய் நாயகரவர்கள் அடுக்களையுள் வரும்வரையில் வாளாதேயிருப்பர். நாயக ரவர்கள் வந்த அன்பர்களுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில், அம்மையாராவது வேறு யாராவது உணவெடுக்க அவர்களை உள்ளே அழைத்தால், அவர் களுக்குப் பெருஞ்சீற்றம் வந்துவிடும். அவர்களது சீற்றத்திற்கு அஞ்சியே அம்மையாராவது, வீட்டிலுள்ள பிறராவது நாயகரவர்கள் உரையாடுகையில் அவர்களை உள்ளே அழைப்பதில்லை. இந்தக் காரணத்தினாலேயே நாயகரவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/148&oldid=1587255" இலிருந்து மீள்விக்கப்பட்டது