உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

3. நாயகரவர்களின் இல்வாழ்க்கை

பின்னர், நாயகரவர்கள்சிவஞானம் எனப்பெயரிய அம்மையாரைத் திருமணஞ் செய்து கொண்டு இல்லற வொழுக்கத்தை இனிது நடத்திவரலானார்கள். இவர்கட்குத் திருமணம் ஆன காலம் எதுவென்று பலரை உசாவியும், அவரெல்லாந் தமக்கது தெரியாதென்றே சொல்லிவிட் டார்கள். ஆனாலும் நாயகரவர்கள் காலமானபோது அவர் களின் தலைமகளாரான ஜகதாம்பாள் அம்மையார்க்குச்

சிறிதேறக்குறைய இருப்பத்தைந்தாண்டிருக்குமாதலால், நாயகரவர்கட்குச் சிறிதேறக்குறைய முப்பதாண்டு நெருங்கிய பொழுது தான் திருமணம் ஆகியிருக்கவேண்டுமென உய்த்துணரலாம்.

யாம் நாயகரவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவர் களின் அருமை மனைவியாராகிய சிவஞானத்தம்மையாரை முதன்முதற்கண்டு வணங்கியது. 1898ஆம் ஆண்டிலாகும். அப்போது நாயகரவர்கட்கு அகவை, 52, அம்மையார்க்கு அப்போது 40 ஆண்டிருக்கலாம். நாற்பதாண்டாகியும் ஆ அம்மையைார் அழகியராகவே காணப்பட்டார்; நீண்டுயர்ந்த ஒல்லியான யாக்கையினார்; அவரது உடம்பின் நிறம் ஆலம்பழுப்பின் நிறத்தை ஒத்ததாயிருந்தது. எல்லாரிடத்தும் மலர்ந்த முகத்தோடு இனிமையாகப் பேசும் இயல்பினர். தம் அருமைக் கணவரான நாயகரவர்கள்பால் மெய்யன்பும் அவர்கள் சொல்லுக்கு மிகக்கீழ்ப்படிந்து ஒழுகும் ஒழுக லாறும் உடையவர். நாயகரவர்கட்கு மிக எளிதிலே பெருஞ் சீற்றம் வருவதுண்டு; அந்நேரத்தில் அவர்கள் அம்மையாரைக் கடுஞ்சொற்களால் ஏசி விடுவர். அவ்வேச்சுரைகளைக் கேட்டும் அம்மையார் சிறிதும் மனம்வருந்தாராய், “எதிர்த் தேதும் பேசாராய், அவர்கள் சீற்றந்தணியத்தக்க முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/147&oldid=1587254" இலிருந்து மீள்விக்கப்பட்டது