உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

113

அதனை மகிழ்ந்தேற்றுக் கொண்ட அச்சுதானந்தர், நம் நாயகரவர்கள், பாற்றிரும்பிவந்து, சங்கராசாரியார்க்குந் தமக்கும் நிகழ்ந்தனவெல்லாம் எடுத்துரைக்க, அவர்கள் அவைகளையெல்லாங்கேட்டு அளவிறந்த மகிழ்ச்சியுடையவராகிச் சிவபிரான் திருவருளை வியந்து வாழ்த்தினார். பின்னர் இருவருங்காஞ்சி மாநகர் சென்று, அங்கிருந்த ஆதிசைவப் பெரியாராகிய முத்துக்கச்சபேசுவரக் குருக்கள் பால் அச்சுதானந்தர் சைவசித்தாந்தத்துறவும் ஏகாம்பரசிவயோகி என்னும் பெயரும் பெற, நாயக ரவர்கள் சைவசித்தாந்த முறைப்படியே சிவதீக்கைபெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் ஏகாம்பரசிவயோகிகளும் அவர்தம் மருமை மாணவரான நம் சோமசுந்தர நாயகரவர் களும் ஒருங்கு கூடியே வடமொழி தென்மொழியிலுள்ள அறிவு நூல்களை யெல்லாம் பரந்தாழ்ந்தாராய்ந்து, அவற்றின் உண்மைப் பொருள்களைச் சன்னை மாநகரின் பற்பல இடங்களிலும் பற்பல சொற்பெருக்குகளால் தெற்றென விளக்கிச் சைவசித்தாந் தத்தைப் பரவச் செய்துவரலாயினர்கள். இவ்வாறு நாயக ரவர்கள் தாமுந்தம்மாசிரியரும் மாயா வாதத்தை அறவே யொழித்துச் சைவசித்தாந்தம் புகுந்த வரலாற்றினை எமக்குத் தந்திருவாய் மலர்ந்தருள, யாம் அதனை அவர்கள் பாற் கேட்டறிந்தபடியே இங்கு வரைந்திட்டே மென்பதனை அன்பர்கள் உணர்தல் வேண்டும்.

இனி முத்து வீரியம் என்னுந் தமிழ் ஐந்திலக்கண நூலொன்று இயற்றிய முத்து வீரிய உபாத்தியாயர்பால் தாம் இலக்கண இலக்கிய நூல் பயின்றதை நாயகரவர்கள் எமக்குப் பலகாற் சொல்லியதுண்டு. ஆனால் அஃது அச்சுதானந்தரை அவர்கள் அடைந்ததற்கு முன்னோ பின்னோ தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/146&oldid=1587253" இலிருந்து மீள்விக்கப்பட்டது