உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

❖ LDMMLDMELD - 21❖

மறைமலையம் –

66

பகுத்துணர்ந்து, தம்மருமை மாணவரான நாயகரவர்களை ஆராமையுடன் தழுவி, அப்பா, உன்னால் யானுஞ் சைவசித்தாந்த மெய்பொருள் தேர்ந்து உய்ந்தேன். இனியான் மாயாவாத குருவான சங்கராசாரியரிடம் பெற்ற துறவை அவரிடமே சென்று ஒப்படைத்துவிட்டுவந்து, சைவ சித்தாந்தத் துறவு பூண்டு, உன்னுடன் கூடிச் சைவ சித்தாந் தத்தை எங்கும் பரப்புஞ் சிவத்தொண்டினைச் செயக்கடவேன்” என உறுதி கூறினர்.

அதன்பின், அச்சுதானந்தர் சங்கராசாரியாரிடஞ் சென்று, தாம் 6 சைவசித்தாந்த மெய்ம்மையுணர்ந்து, மாயாவாத வேதாந்தப் பொய்ம்மை கண்ட பரிசெல்லாம் விளக்கிச்சொல்லி, அவரதுடன்பாடுபெற்று, அவர் கொடுத்த மாயாவாதத் துறவை அவரிடமே ஒப்படைத்துவிட்டனர். அஞ்ஞான்றிருந்த கும்பகோணஞ் சங்கராசாரியாருந்தூய துறவுள்ளம் உடை யராகையால், அச்சுதானந்தர் எடுத் தியம்பியவைகளையெல்லாம் அமைதியுடன் கேட்டுத், தாமுந்தம் முன்னோருங்கைக் கொண்ட மாயாவாத வேத வேதாந்தம் பழைய வேதோபநிடதக் கருத்துக்கு முற்றும் மாறாயிருப்பச், சைவசித்தாந்தக் கொள்கைகளே அவை யிற்றின் கருத்துக்கு முழுதும் ஒத்தனவாயிருத்தல் தேர்ந்து, அச்சுதானந்தரை நோக்கி, “நீர் கூறுவனவெல்லாம் உண்மை யாகவேயிருக்கின்றன. நாங்கைக் கொண்டவேதாந்தம் நமக்கு உண்மை அறிவிப்பதாயில்லை, சைவசித்தாந்தமே உள்ளதை உள்ளபடி அறிவித்து நம்மைச் சிவத்தின் திருவருள் நெறியிற் செலுத்துந்தகையதாயிருக்கின்றது. ஆதலால், நீர் விரும்புகிற படி வேதாந்தத்துறவைக் கைவிட்டுச் சித்தாந்தத்துறவை மேற்கொள்ளலாம். எமக்குஞ்சித்தாந்தத் துறவையே மேற்கொள்ள விருப்பம் மேலெழுந்தாலும், இம்மடத்தின் முன்னோர் கட்டிய ஏற்பாட்டிற் சிக்குண்டிருக்கின்றே னாதலால், யான் இதனைவிட்டு வருதல் ஆகாது. ஆனாலுஞ், சைவசித்தாந்த முடிபான சந்திரமௌலீசுவரர்பூஜையையே யாங்கள் வழுவாது செய்து வருதலால், யான் இங்கிருந்த படியே சைவ சித்தாந்தக் கொள்கையை அகத்திற்கொண்டு, ஈசன் திருவடிக்கு ஆளாவேன்' எனக் கண்ணீர் உரைத்து, அவர்க்கு விடைகொடுத்தனர்.

வார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/145&oldid=1587252" இலிருந்து மீள்விக்கப்பட்டது