உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

111

அதன்பின், நாயகரவர்கள் தம் ஆசிரியர் அச்சுதானந்தர் தமக்குச் சைவ சித்தாந்தமெய்பொருளையுணர்த்தாமல், L மாயாவாதப் பொய்ப்பொருளையுணர்த்தியதனை எண்ணி யெண்ணி வருந்தி, அவர் அவ்வாறு செய்தது என்னென்று கேட்பான் வேண்டி, அவரையணுகிச் "சுவாமி, தீஞ் சுவைமிக்க வெள்ளைச் சீனி தின்னப் பேரவாக்கொண்டு வேண்டி வந்த ஒருவன் வாயில், வெள்ளிய ஆற்றுமணலைத் தெள்ளியெடுத்துப் பெய்தாற்போல, உண்மையான தத்துவ ஞானத்தைப் பெறவேண்டுமென விழைந்து வந்த எனக்குப் பொய்யான மாயாவாதக் கொள்கையை அறிவுறுத்தி னீர்களே!இதற்குத் தானா யான் தங்களை அடுத்தேன்?” என ஆற்றாமையொடு வினவினார். திடுமென இங்ஙனங் கேட்ட தம் மாணவரைப் பார்த்து அச்சுதானந்தர் நெஞ்சந் திடுக்கிட்டு, “அப்பா, நான் அறிந்ததை உனக்கு ஒளியாமற் சொன்னேனே யல்லாமல், வேறு வஞ்சனையான தொன்றும் என்னிடம் இல்லையே யான் உனக் உணர்த்தியதை மாயாவாதம் என்றும், அதனின் வேறான உண்மைஞானம் ஒன்று உளது என்றுங் கூறினையே. அவ்வகைகளையெல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்!" என்று கட்டளையிட்டார். அதன்மேல், நாயகரவர்கள் தமக்கு அவர் உணர்த்தியது உண்மை வேதாந்தம் ஆகாமல் மாயாவாதம் நுவலுவ தாதலுஞ், 'சிவஞானபோதம்' சிவஞானசித்தியார்’ முதலான மெய்யறிவு நூல்களில் தெள்ளத் தெளிய விளக்கப்படுஞ் சைவ சித்தாந்தமே உண்மை வேதாந்தமாதலும் பிரிந்தினிது

எங்க விரித்து விளக்கினார். விளக்கிய அவ்வுரைகேட்டு அச்சுதானந்தர் மாயாவாதத்துக்குஞ் சைவ சித்தாந்தத்துக்கும் உள்ளவேறுபாட்டினை நன்குணர்ந்து, அது முதற் சிவஞான போதம் முதலான நூல்களை ஆழ்ந்தாராய்ப் புகுந்தார். அச்சுதானந்தரும் இயற்கையிலே நுண்ணறிவும் எதனையும் நடுவுநின்றாராய்ந்து உண்மை காணும் விழைவும் மிகுதியும் உடையராகையால், சைவ சித்தாந்த நூல்களை முற்றும் நன்றாராய்ந்து பார்த்துத் தாம் நெடுங்காலங்கைக் கொண்டிருந்த L மாயாவாதம் பொய்யா தலும், சைவ சித்தாந்தமே மெய்யறிவு காட்டி உயிர்களை இறைவன்றன் பேரருள்இன்ப வீட்டிற்கு உய்ப்பதாதலுந் தெற்றெனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/144&oldid=1587251" இலிருந்து மீள்விக்கப்பட்டது