உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் – 21

என்பவைகளை மிகுத்துப் பேசும் இருக்கு முதலான வேதப் பகுதிகளும் பிராமணப் பகுதிகளும் இழிக்கத் தக்கனவா மென்றும் அறிவுரை கூறி ஆரிய இனத்தார்க்கும் அவர் வலையிற் சிக்கிய தந்தமிழ் மக்கட்கும், நல்லறிவுச் சுடர் சு காளுவுவாராயினர்.

இங்ஙனமாக, ஆரியக் குருமார்க்கும் அவரொடு கலந்து கொண்ட இரு பிறப்பாளர்க்கும் நல்லறிவுச் சுடர்கொளுவும் பொருட்டுத் தமிழாசிரியருந் தமிழ் வேந்தர்களும் வட மொழியில் ஆக்கிய நூல்களுள் 'உபநிடதங்கள்' எனப் பெயரிய நூல்களே தலைசிறந்தனவாய் விளங்குகின்றன. அவ்வுப நிடதங்களிற் சொல்லப்பட்ட எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபிரான் தனிப்பெருஞ்சிறப்பினையும், ஓவாப்பிறப்பு இறப்பு வட்டத்திற் கிடந்து சுழன்று துன்புறும் மக்கள் தேவர் முதலான சிற்றுயிர்கள் அத்துன்பம் நீங்கி இறைவனோடு ஒன்றுகூடி அவன் றிருவருளின்பத்திற்றோய்ந்து மகிழ்ந்திருக்கு மாற்றினையும் அறிவின் மிக்காரேயன்றி, அதிற் குறைந்தார் உணர மாட்டாராயினர். அதனால், அவ்வுபநிடத காலத்திற்குப் பின் வந்த சூதர் 'வியாசர் முதலான தமிழாசிரியர்கள், கைக்கும் மருந்து தின்னாத தன் மகவுக்கு அன்னையானவள் அதனைக் கன்னலுட் பொதிந்து ஊட்டுதல்போலப், பலவேறு

கதைகளைப் படைத்து, அவற்றின் வாயிலாகச் சிவத்தின் இயல்பும், உயிரின் இயல்பும், உயிரைப்பொதிந்த மும்மல இயல்பும், மும்மலக் கட்டுவிட்டு உயிர் சிவத்தைத் தலைக் கூடிப் பேரின்பம் நுகருமாறும் எல்லாம் அறிவிற்குறைந்த அப் பொதுமக்கட்கு நன்கினிது விளக்குவான் புகுந்து புராணங்கள் இதிகாசங்கள்' முதலான நூல்களை, முதலான நூல்களை, வடமொழி தென் மொழிகளில் இயற்றி வைத்தனர். ஆகவே, பழைய இருக்கு, எசுர் முதலான வேதங்களில் தமிழாசிரியர் சேர்த்து வைத்த பகுதிகளில் உருத்திர சிவவழிபாடும் அதன் ஏற்றமுமே D காணப்படுமென்றும், தமிழாசிரியரே முழுதும் இயற்றிய 'சாங்கியம்', “யோகம்”, ‘உபநிடதங்கள்’, ‘பழைய புராணங் கள்' 'இதிகாசங்கள்' என்பவற்றிலெல்லாம் முழுமுதற் கடவுளாகிய சிவபிரான்றனிப் பெருஞ்சிறப்பும், உயிர்த் தொகுதியிற் சேர்ந்த ஆரிய தெய்வங்களின் இழிபும், அவற்றை வழிபடுதலால் ல் உயிர்கள் பிறவித் துன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/159&oldid=1587266" இலிருந்து மீள்விக்கப்பட்டது