உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

127

நீங்கப்பெறாமையும், அவற்றின் பொருட்டு செய்யும் ஆரிய உயிர்க் கொலை வேள்விகள் பெருந்தீவினை பயப்பவாதலும், இறைவனடி சேர்ந்தார்க்கே பிறவித் துன்பம் அற்றுப் பேரின்பம் வாய்த்தலும், இன்னும் இவை போல்வன பிறவும் வ வற்புறுத்தப் படுகின்றனவென்றும் நினைவிற் பதித்தல் வேண்டும்.

இவ்வாறு பண்டைத் தமிழாசிரியர் முழுமுதற் கடவுள் ருப்பும் இயல்புந்தேற்றி வடமொழியிற் செய்து வைத்த நூல்களைப் பயின்றும், ஆரியரும் அவரை முழுதும் பின் பற்றிய பார்ப்பனரும் உயர்ந்த முழுமுதற் கடவுள் வணக்கத்தில் அறிவுசெல்ல மாட்டாத தீவினையுடையவராய், இழிந்த பல சிறு தெய்வவணக்கத்திலும் அவற்றின் பொருட்டு எடுக்கும் வெறியாட்டு வேள்விகளிலுமே மனம் ஈர்க்கப் பட்டுப் பின்னும் பின்னும் அவற்றையே கடைப்பிடியாய்க் கொண்டு ஒழுக லாயினர்! அதுமட்டுமோ! முழுமுதற் கடவுளாகிய சிவபிரான் வணக்கத்தைப்பொதுமக்கள் கைக்கொளாது தமது சிறு தெய்வ வணக்கத்தையே அவர்கள் இறுக்கமாய்ப் பிடித்துக் கொளல் வேண்டியும், தாம் எடுக்கும் வெறியாட்டு வேள்விகளே அவற்றைச் செய்வார்க்கு இம்மை மறுமை நலங்கள் எல்லா வற்றையும் ஒருங்கே பயக்கவல்லன என்னும் ஒரு பெரும் பிழையான எண்ணத்தை அவர்களுள்ளத்திற் பதித்தல் வேண்டியும் அவ்வாரியப் பார்ப்பனர் தாமும் பலப்பல கதை களைப் பிற்பிற்காலங்களிற் படைத்து முன்னே தமிழாசிரியர் இயற்றி வத்த புராண திகாசங்களில் அவற்றை நுழைத்ததுமட்டுமல்லாமல், வேறு தனி நூல்களாகவு ம் அவையிற்றைச் செய்து வைத்தார்கள். அதுவேயுமன்றித் தமது சிறு தெய்வ வணக்கத்திற்குந் தாம் எடுக்கும் வெறியாட்டு வேள்விகட்கும் ஒத்து நின்றாரை ‘முனிவர்கள்’ ‘இருடிகள்’ என்றும், அவை தமக்குத் துணையாயும் உதவியாயும் நின்ற அரசர் சிலரை ‘விஷ்ணுவின் அவதாரங்கள்' என்றும், அவை யிரண்டிற்கும் மாறாய் நின்ற அரசர்களை 'ராக்ஷஸர்கள்' என்றும் தாம் புதிது படைத்த வடநூல்களில் அவ்வாரியப் பார்ப்பனர் வரைந்து வந்தனர். முன்னரே, தமிழாசிரியர் இயற்றிய ‘பாரதம்' என்னும் இதிகாச நூல் சிவபிரான்றன் முழு முதன்மையும், அவனை வழிபட்டுய்ந்த அரசர் வரலாறுந் தெரிப்பதொன்றாகவும், ஏனை மாந்தரைப் போல் தாய்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/160&oldid=1587267" இலிருந்து மீள்விக்கப்பட்டது