உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் – 21

வயிற்றிற் பிறந்து, பகைவர்களாற் பெரிதும் நலியப் பெற்றுக் கடைசியில் ஒருவேடன் எய்த அம்பால் இறந்தொழிந்த 'கிருஷ்ணனை' விஷ்ணுவின் அவதாரமென ஒரு பொய்யுரை புனைந்து கட்டி, அவன் செய்யாத ஆண்மைச் செயல்களை அவன் செய்தனவாகப் படைத்தெழுதி, அவை தம்மை யெல்லாம் அப்பாரத நூலின் இடையிடையே அப்பார்ப்பனர் நுழைத்துவிட்டனர். அஃதொன்றோ! தசரத மன்னனின் மகனான இராமன் என்பவன் இத்தென்னாட்டின் தெற்கேயுள்ள இலங்கைக்குச் சென்ற தில்லையாகவும், பத்துத்தலையும் இருபதுகைகளும் உடைய இராவணன் என்னும் ஓர்அரக்க அரசன் அவ்விலங்கையை அரசாண்டான் என்பதற்கு ஏதொரு சான்றும் இல்லையாகவும், அவ்வரக்க அரசனாற் கவர்ந்து காள்ளப்பட்ட சீதையாகிய தன் மனைவியை மீட்டுக் கொள்ளற் பொருட்டு, அவ்விராமன் குரங்குகளைத் துணை கூட்டிச் சென்று அவ்வரக்கனை மடித்து அவளை மீட்டான் என்னும் ஒரு பெரும் பொய்யான கதையைப் புனைந்து கட்டி, இராமனும் விஷ்ணுவின் அவதாரம் என நாட்டுதற்கு

ராமாயணம்’ என்னும் ஒரு புதிய இதிகாச நூலை அப்

பார்ப்பனர் அதன்பின் இயற்றி வழங்கவிட்டனர். இங்ஙனமே, பிறப்பு இறப்பில்லாக் கடவுளுக்குப் பல பிறப்புகளை (அவதாரங்களை)க் கற்பித்துப் 'பாகவதம்' முதலான பொய்ந் நூல்களைப் பின்னும் பின்னும் இயற்றி வைத்ததுமல்லாமற், பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் சிவத்தையும் அவற்றின் கண் இகழ்ந்து பேசுவாராயினர்.

இவ்வாறு ஆரியப் பார்ப்பனரில் ஒரு சாரார் மக்களைக் கடவுளாக்கிப் பொய்யான கதைகளைப் பெருக்கிப் பொது மக்கள் எல்லாம் வல்ல ஒரே முழுமுதற்கடவுளான சிவத்தை வணங்கவொட்டாமற் றடை செய்துவர, மற்றொருசாரார் வடமொழிப்பழைய நூல்கட்கு முற்றும் மாறாக ‘மாயா வாதம்' எனப் பெயரிட்ட ஒரு பொல்லாத கொள்கையைப் புதிது படைத்து, அதற்கு 'வேதாந்தம்' எனப் பெயர் புனைந்து, இந்து மக்களிற் சிறிது கற்றவர்களுந் துறவாடை பூண்டவர்களுமெல்லாம் அதனையே கடைப்பிடித்து ஒழுகு மாறு செய்துவிட்டனர். இம்மாயாவாதக் கொள்கையைப் பொல்லாததென்று ஏன் கூறினோமென்றால்; அறியாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/161&oldid=1587268" இலிருந்து மீள்விக்கப்பட்டது