உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

129

யிருளிற் புதைந்து தம்மையும் அறியாமல் தந்தலைவனையும் அறியாமற் பெரிதும் துன்புற்றுக் கொண்டிருக்கும் எண்ணிறந்தக் கோடியுயிர்களையும் எல்லாம் வல்ல இறைவன் கண்டு இரங்கி, அவை தம் அறியாமை நீக்கி, அவை தமக்கு அறிவும் இன்பமுந்தருதற்பொருட்டே புலனறிவுக்கு எட்டாத மிக நுண்ணிய நிலையிலிருந்த 'மாயை' என்னும் உள்பொருளிலிருந்து, பலதிறப்பட்ட உடம்புகளையும், அவ்வுடம்புகளுலவுதற்கு இந்நிலவுலகம் போன்ற பல கோடியுலகங்களையும், அவ்வுடம்புகளில் வியக்கத்தக்க பல உறுப்புகளையும், அவ்வுறுப்புகளின் வாயிலாய் நுகர்தற்குப் பல்சுவைப் பண்டங்களையும் படைத்து, அவையிற்றை அவ்வுயிர்கட்குக் கொடுத்திருக்கின்றான். அங்ஙனங் கொடுத்தி ருக்கும் உடம்புகளில், மற்றையுயிர்களைப் போல் மக்கள் உயிருந்தங்கியிருந்து, இவ்வுலகத்துள்ள பல்சுவைப் பொருள் களையுந் தம்முடம்பின் அகத்தும் புறத்தும் அமைந்த மனம் விழி முதலான கருவிகளால் நுகர்ந்து அறிவும் இன்பமும் பெற்று வருகின்றன. இங்ஙனம் இறைவன் அருள் கூர்ந்து கொடுத்த உடம்பு, உடம்பினுறுப்புகள், உலகம், உலகத்துப் பொருள்களால் அளவிறந்த பயனை அடைந்து வரும் மக்கள், இவ்வமைப்புகளையெல்லாம் முற்றும் மறந்து, 'இ யெல்லாம் பொய்!' என்று வாய்ப்பறையறைதல் எத்துணைப் பொல்லாதது! மேலும், வையெல்லாம் பொய்யாய்

.

வை

ஒழியினும், இவற்றைச் சான்றாக நின்று நோக்கிக்

கொண்டிருக்குங் கடவுளாகிய நான் மட்டுமே மெய்! என்னின் வேறாய்க் கடவுளென்று ஒரு தனிப் பொருள் இல்லை!' எனக் கரைவது இன்னும் எத்துணைப் பொல்லாங் குடையது! தன்னுடம்பின்கண் தான் அறியாமலே வளரும் ஒரு மயிரிழையைத் தானும் ஆக்க மாட்டாதவனான, தனக்கு வெளியே நிலத்தின் கண் முளைக்கும் ஒரு சிறு புல்லைத் தானும் படைக்கமாட்டாதவனான ஒரு புல்லியமகன், பிறக்குங்காலும் இறங்குங்காலுந்தன் நிலை இன்னதெனத் தானே அறியாதவனான ஒரு பேதைமகன், தான் இந் நிலத்தின் கண் வாழுஞ் சிறுவாழ்நாள் எல்லையிலும் பல்பிழை செய்து நோயுந்துன்பமுங் கவலையும் வறுமையும் எய்தி மடிவானான ஒரு மட்டி மகன் தன் உண்மை நிலையை முற்றும் மறந்து தன் றைவன் தனக்குச் செய்த ஒப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/162&oldid=1587269" இலிருந்து மீள்விக்கப்பட்டது