உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் – 21

புயர்வில்லாப் பெருநன்றியை முழுதும் மறந்து யானே கடவுளென்றும் என்னைத் தவிர வேறொரு கடவுளில்லை யென்றுங் கழறுவனாயின், அதனினும் பொல்லாங்கு மிக்கது பிறிதுண்டோ? கூறுமின்! இக்காரணம் பற்றியே மாயாவாதம் பொல்லாததென்றாம்.

மேற்சொல்லியவாறு, கடவுளை மக்களாக்கிய ஒரு சார்பார்ப்பனக் கொள்கையும், மக்களைக் கடவுளாக்கிய பிறிதொரு சார் பார்ப்பனக் கொள்கையும் பின்றைக் கால வடநூல்களிற் பெரிது கலந்து, நம் இந்து மக்களைப் பொய்ந்நெறியிற் புகுத்தி, அவர்தனித் தலைமைப் பெருங் கடவுளையுணர்ந்து அவன்றன் அருட்பேரின்பத்திற் படிந் திருக்கவொட்டாது தடை செய்த பிறழ்ச்சிகளெல்லாம், இத்தென்றமிழ் நாட்டிற் சோமசுந்தர நாயகர் தோன்றி யிராவிட்டால் எவர்க்குமே புலனாகாது போயிருக்கும். அதனால், நம்மனோர் தமது பிறவிப் பயனை இழந்தே போயிருப்பர்! ஆனால், அங்ஙனம் ஆகாமைப் பொருட்டு அவரை இறைவன் இங்ஙன்றோற்றுவித்தது ஒரு பேரருள்!

நாயகரவர்கள் சைவசித்தாந்த உண்மைகளை விளக்கத் துவங்கிய காலத்தில், வைணவப் பார்ப்பனராற் சில நூற்றாண்டுகளாகக் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதைகளும் புரட்டுகளுமே எங்கும் பரவி வழங்கலாயின. வடமொழி யையும் அதன்கண் உள்ள நூல்களையும் பார்ப்பனரன்றி வேறு குலத்தவர் எவரும் ஓதலாகாது என்னும் ஒரு கற்பனையையுண்டாக்கி அதனை அவர்கள் மற்றையோர்க்கு வற்புறுத்திச் சொல்லி வந்தமையாலும், பார்ப்பனரல்லா தார்க்கு வடநூல் கற்பிக்கும் பள்ளிக் கூடங்களாதல் ஆசிரியர்களாதல் இல்லாமையாலும், பார்ப்பனரல்லாதார் வடநூலிற் பயிற்சி செய்வது சிறிதும் இயலாததாயிற்று. வடமொழி தென்மொழி ஆங்கில மொழிப் பயிற்சி எங்கும் பரவியிருக்கும் இந்நாளிலுங்கூடப் பார்ப்பனரல்லாதார் வடநூல் கற்றற்கு, வடமொழிக் கல்லூரிகளில் இடந்தரப் வடமொழி தன்மொழிப் பயிற்சி அருகிய அந்நாளிற் பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் அவற்றை எளிதிலே கற்றறிதல் இயலுமோ என்பதை நன்கு எண்ணிப் பாருங்கள்! ஆகவே, பார்ப்பனர்கள் தமதுயர்

படாதிருக்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/163&oldid=1587270" இலிருந்து மீள்விக்கப்பட்டது