உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

தாம்

131

வுக்குந் தமது நலத்திற்குந் தமது கொள்கைக்கும் வேண்டு வனவெல்லாம் வேண்டுமட்டுங்காலங்கடோறும் படைத்து, அவை தம்மைப் பழைய வடநூல்களில் நுழைத்து வைத்ததுமல்லாமற், புதுப்புது நூல்களாகவும் இயற்றி, அவையெல்லாங் கடவுளால் அருளிச் செய்யப்பட்டவைகள் என மொழிந்து, தாஞ் செய்த புரட்டுகளிலுள்ள பொய்ம்மை களையுணர்ந்தவர்கள் கேட்கவொட்டாமல் அவர்கள் வ்வாறு ஓராயிர

வாயையும் அடைத்துவிட்டார்கள். ஆண்டுகளாக வைணவப் பார்ப்பனர்களும் மாயாவாதப் பார்ப்பனர்களுங் கட்டிய கட்டுக் கதைகளுங் கொள்கை களும் இத்தென்றமிழ் நாடெங்கும் பரவி வருகையில், மெய்கண்ட தேவ நாயனாரும் அவர் தம் மாணாக்கரும் அவர் வழிவந்த ஆசிரியர்களுந் தோன்றி அவற்றின் பொய்ம்மை காட்டிச் சைவசித்தாந்த உண்மை தேற்றிச் சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலான மெய்ந்நூல்கள் அருளிச் செய்து, தமிழ்மக்கள் உண்மை கடைப்பிடித்து உயர்நெறிதலைக் கூடச் செய்தனர். அவர்கட்குப் பின் சீர்காழிச் சிற்றம்பல நாடிகளும் அவர்தம் மாணாக்கருந்தோன்றிச் சைவசித்தாந்த உண்மை களை எங்கும் பரவச் செய்தனர். அவர்கட்குப் பின் குமர குருபரசுவாமிகள் தாயுமான சுவாமிகள் தோன்றிச் சைவ சித்தாத்த உட்பொருள்களை எங்கணும் விளங்கச் செய்தனர்.

தே காலத்தில் அப்பைய தீட்சிதரும் அரதத்த சிவா சாரியாருந் தோன்றி வடமொழி மெய்ந்நூற்பொருள்களை விரிவாக எடுத்துக் காட்டி அவை முற்றுஞ் சிவபிரான் முழு முதன்மையினையே விளக்குதலும், அவற்றிற்குமாறாகப் பின் வந்தாராற் செய்யப்பட்ட வடமொழிப் பொய்ந்நூல்கள் முழுமுதற்கடவுளாகிய சிவத்தைப் பழித்துப் பேசிப், பல பிறவியிற் பிறந்துழன்றுமாண்ட மக்களாகிய அரசர்களை முழு முதற் கடவுளாக்கித் தீவினை பெருக்குதலும் பிரிந் தினிது விளங்கத்தெருட்டினார்களாயினும், அவர்கள் இயற்றிய நூல்களெல்லாஞ் சொல்வழக்கில் இல்லாத வட மொழியில் ஆக்கப்பட்டிருத்தலின் அவை வடமொழி வல்லார்க்கன்றி அஃதறியாத ஏனைப் பொதுமக்கட்குந் தமிழாசிரியர் இயற்றிய நூல்களைப் போற், பயன்படுதல் இலவாயின.

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/164&oldid=1587271" இலிருந்து மீள்விக்கப்பட்டது