உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

133

நாயகரவர்கள் சென்னை நகராண்மைக் கழக வேலையி னின்றும் நீங்கிய காலம் கி.பி.1881ஆம் ஆண்டென்று, 'சித்தாந்த தீபிகை' என்னும் ஆங்கில வெளியீட்டின் நான்காம் மலர் ஒன்பதாம் இதழிற் குறிக்கப்பட்டிருக்கின்றது. அவ் வலுவலினின்றும் அவர்கள் நீங்க வேண்டி நேர்ந்த காரணத்தை அவர்களே எமக்கு நேரிற்றெரிவித்தனர்கள். அதுவருமாறு, நாயகரவர்கள் சிவபிரான் றிருக்கோயிற்றிரு விழாக்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதிலும் அவ்விழாக்களுக்கு வரும் பெருந்திரளான மக்கட்கூட்டத்தைக் காண்பதிலும் மிக்க விருப்பம் வாய்ந்தவர்கள். திருவொற்றியூர் மகிழடி விழாவுக்குந் திருமயிலாப்பூர் அறுபத்து மூவர் விழாவுக்கும் எம்மைத் தம்முடன் அவர்கள் அழைத்துச் சென்றதுண்டு. அக்காலங்களில் அவர்கட்குண்டான மனக் கிளர்ச்சியினைக் கண்டு யாம் மிகவும் வியப்புற்றோம். பெருந் திரளான மக்கட்கூட்டத்திடையே இறைவன் திருவுருவம் ஆடையணிகலங்களாலும் மலர்மாலைகளாலும் ஒப்பனை செய்யப்பட்டு, இசைக்கருவி முழக்கத்துடனும், அன்பர்களிடும் அரஅர’ என்னும் ஓசையுடனும் வருதலைக் கண்டபோது, அவர்களுடைய கைகளிரண்டுந் தலைமேற் கூம்ப, அவர்கள் கண்களிலிருந்து நீர்வரிவரியாய் ஒழுக முழுதும் அன்பின் வழியராய் அவர்கள் நின்ற நிலை எமது கன்னெஞ்சத்தையும் உருகச் செய்தது; நாயகரவர்கள் திருவுருவவழிபாட்டின் இன்றியமையாமையினை நன்குவிளக்கி அர்ச்சாதீபம் எனப் பெயரிய ஓர் அரிய நூல் எழுதிய வளவில் நில்லாது; தாம் எழுதியபடியே அவ்வழிபாட்டில் உள்ளம் ஈடுபட்டு நின்றமை, அவர்கள் தாம் உண்மையென ஆராய்ந்து கண்டதுறையிற் காட்சிமட்டில் அமையாது செய்கையிலும் அதனைப் புலப் படுத்தும் வாய்மையினர் என்பதைத் தெரிவிக்கின்றது. வ்வாறு திருவொற்றியூர் திருமயிலாப்பூர்த் திருவிழாக் களுக்குச் சென்று றைவனை வணங்குதலிற் கடைப் பிடியாய் நின்ற நாயகரவர்கள் 1881 1881ஆம் ஆண்டு தி ரு வொற்றியூரில் நிகழ்வதான மிகிழடித் திருவிழாவுக்குச் சல்லல் வேண்டி அன்றைப் பிற்பகலுக்கு விடுதி தருமாறு தமக்கு மேலுள்ள நகராண்மைக் கழகத் தலைவரை வேண்டினார். ஆனால், அத்தலைவரோ நோய்முதலான

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/166&oldid=1587273" இலிருந்து மீள்விக்கப்பட்டது