உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் – 21

இன்றியமையாத காரணங்களாலன்றி, இத்தன்மையவாம் புல்லியகாரணங்கள் பற்றி விடுதி தரல் ஆகாதென்றார். அது கேட்ட நாயகர் உளம் வருந்தி, 'யான் பொய் சொல்ல மாட்டாமல் மெய்யே சொல்லி அரைநாள் விடுதி கேட்டால் அதனைக் கொடுக்கலாகாதென்றும், அது புல்லிய காரண மென்றும் புகலுகின்றீர்கள்! ஆனாற், பொய்க் காரணங் கற்பித்துச் சொல்லி விடுதி கேட்பாரெல்லாம் அதனை எளிதிலே பெறுகின்றனர்! பொய் கூறிப் பிழைப்பதிலும், அதற்கேதுவான இவ்வேலையினின்றும் யான் விலகுதலே தகுவது எனக் கூறி, அவ்வேலையை க உடனே விட் டொழித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/167&oldid=1587274" இலிருந்து மீள்விக்கப்பட்டது