உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

4 தமது 35ஆம் ஆண்டிற்கு முன் நாயகர் ஆற்றிய சைவத் தொண்டு

நாயகரவர்கள் மாயாவாத மதத்தைத் தழுவியிருந்த தமது இளமைக்காலத்தில் முதன்முதல் உரைநடையில் இயற்றி வெளியிட்ட மறுப்பு நூல் வேதபாஹ்ய சமாஜ கண்ட மாகுமென்பதும், அந்நூல் வெளிவந்த ஆண்டு கி.பி.1868 ஆகையால் அப்போது அவர்கட்கு அகவை 22- ஆய ஆ தென்பதும் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேம். அதற்குப் பின் ஐந்தாண்டுகள் கழித்து 1873 ஆம் ஆண்டிற் சிவாதிக்ய ரத் நாவளி என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி மறுப்புரை நூல் நாயகரவர்களால் இயற்றப்பட்டுச் சுந்தர சிவாசாரியசுவாமி என்னும் ஒரு துறவி பெயரால் வெளியிடப்பட்டுள்ளது. நாயகரவர்கள் தாம் இயற்றிய நூல்களைத் தமது பெயராலுந் தம் நண்பர் மாணாக்கர் பெயராலுந் தாம் வெளியிடும் வழக்கத்தைத் தமது ஆசாரிய பிரபாவ நூலில் (194ஆம் பக்கம்) குறிப்பிட்டிருக்கின்றார்கள். அப்போது நாயகருக்கு அகவை 27. இவ்வைந்தாண்டுகட்கிடையில் எப்போது நாயகரவர்கள் சித்தாந்தக் கொள்கையினைத் தழுவினார்கள் என்பது புலப்படவில்லை. என்றாலுஞ் சிவாதிக்ய ரத்நாவளி முதற்பாகத்திலேயே அவர்கள் வடநூற் கடலுஞ் சைவசித்தாந்த நூற் கடலுந்துருவி ஆராய்ந்தெடுத்து விளக்கியிருக்கும்அரும்பெரும் பொருட் பரப்பின்றன்மையினை உற்று நோக்குங்கால், அவர்கள் வேதபாஹ்யசமாஜ கண்டனம்' எழுதி வெளியிட்ட ஒன் றிரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே மாயவாதமருள் நீங்கிச் சைவசித்தாந்தத்தெருள் தலைக் கூடப் பெற்றாராகல் வேண்டுமென்பது உய்த்துணரக் கிடக்கின்றது.

மாயாவாதத்தை விட்டொழித்துச் சைவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/168&oldid=1587275" இலிருந்து மீள்விக்கப்பட்டது