உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

  • மறைமலையம் – 21

ஏனைத்

இனி, நாயகரவர்கள் சைவ சித்தாந்த உண்மை தெளிந்து, பிறப்புஇறப்பு இல்லா முழு முதற் கடவுட்டன்மை சிவ பிரான் ஒருவர் மேற்றாகவே வைத்துப் பழைய வடநூல்கள் தமிழ் நூல்களெல்லாம் ஒரு முகமாய் நின்று ஒத்துரைக்கக் காண்டலானும், மற்று விஷ்ணுவோ பத்துப் பிறவிகளிற் பிறந்துழன்று பின் மாய்ந்தாரென்று அவருடைய அருஞ் ய செயல்களைக் கூறுவான் புகுந்த ‘பாகவதம்' முதலான விஷ்ணு புராணங்களே வெளிப்படையாய்க் கூறக்கண்டலானும், அங்ஙனமே 'நான்முகன்' இந்திரன் முதலான ம தேவர்களும் பிறந்து வளர்ந்து மாண்டாரென அவரவரைச் சிறப்பித்துக் கூறும் புராணங்களே தெற்றென விளம்பக் காண்டலானும், மக்களெல்லாருந் தம் போன்ற மக்களைக் கடவுளராகப் பிறழ நினைந்து அவரையே வழிபட்டு, உண்மை முழுமுதற் கடவுளாகிய பிறப்பிறப்பு இல்லாச் சிவத்தை வழிபடாமல் தமது பிறவிப் பயனை இழந்து பொய்ந்நினைவில் மாண்டு போதலாகாதென தன உள்ளத்தெண்ணி, அவரைப் பொய்ந்நெறியின்றுந் திருப்பிச் சைவசித்தாந்த மெய்ந்நெறியிற் செலுத்திச் சிவவழிபாட்டில், தலைப்படுவிக்க முனைந்தார்கள்.

இவ்விந்திய நாட்டிற் சிவபிரானை வழிபடுஞ் சைவ சமயமும் விஷ்ணுவை வழிபடும் வைணவசமயமும் அன்றி வேறு சமயங்கள் இல்லாமை நினைவிற் பதிக்கற்பாற்று. பண்டை நாளிலிருந்த மக்கள் இறைவனை அப்பனாகவும் இறைவியை அம்மையாகவும் வைத்து வணங்கி வந்தார்கள். அங்ஙனம் வணங்கி வந்தவரையில் அம்மக்களுள் ஏதொரு வேற்றுமையும் உண்டாயதில்லை. மற்றுக் காலஞ்செல்லச் செல்ல இறைவியை வணங்கிவந்த குழுவினர், கடவுளைப் பெண் வடிவில் வைத்து வணங்குதலை இழிவாகக் கருதி, அதனையும் திருமால் என்னும் ஆண்வடிவாக்கி வணங்கத் தலைப்பட்டு, முன்னமே கடவுளை ஆணுருவில் வைத்து வணங்கி வந்த குழுவினரிலிருந்துந் தம்மைவேறு பிரித்துக் காண்டார்கள். இங்ஙனம் பிரிவும் வேற்றுமையும் உண்டாகவே, இறைவனை வணங்கிய குழுவினர் ‘சைவர்' எனவும், இறைவியை விஷ்ணுவென்னும் ஆண் வடிவாக்கிய குழுவினர் வைணவர்’ எனவும் வேறு வேறு பெயர் பெறலாயினர். அங்ஙனம் வைணவர் இறைவியை ஆண் வடிவாகக் கற்பித்துக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/169&oldid=1587276" இலிருந்து மீள்விக்கப்பட்டது